செகவீர பாண்டியனார்
கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார் (10 மார்ச் 1886 - 17 சூன் 1967) இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் ஆவார். இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டநத்தம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். கட்டபொம்மன் வழிவந்த குடும்பத்தைச் சேர்ந்த இவர், முத்துக்கவிராயர் என்பவரிடம் முறையாக இலக்கண, இலக்கியங்களைக் கற்றவர். சிறந்த புராண சொற்பொழிவாளராகத் திகழ்ந்தவர். கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு வடிவங்களில் நூல் எழுதியவர்.[1]
செகவீர பாண்டியனார்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
செகவீர பாண்டியனார் |
---|---|
பிறந்ததிகதி | 10 மே 1932 |
பிறந்தஇடம் | ஒட்டநத்தம், திருநெல்வேலி, சென்னை மாகாணம் |
இறப்பு | சூலை 6, 2011 | (அகவை 79)
பெற்றோர் | பெருமாள்சாமி, ஆவுடையம்மாள் |
மதுரை மேலமாசி வீதியில் வாழ்ந்து மறைந்தவர்.
படைப்புகள்
செகவீரபாண்டியனாரின் படைப்புகள் 2010-11 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு இதற்கானப் பரிவுத் தொகையாக 6 இலகரம் (இலட்சம்) இந்திய ரூபாய்களை நல்கியது. இவரது படைப்புகளின் பட்டியல் வருமாறு:
வ.எண் | ஆண்டு | நூலின் பெயர் | பதிப்பாளர் | குறிப்பு(கள்) |
01 | 1927 | திருக்குறள் குமரேச வெண்பா[2] | 8 தொகுப்புகள் | |
02 | கம்பன் கவிநிலை உரைநடை | 15 தொகுதிகள் | ||
03 | அகத்திய முனிவர்[1] | |||
04 | வீரபாண்டியம் | பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்மனைப் பற்றி வழங்கிவந்த வாய்மொழி இலக்கியங்களை எல்லாம் தொகுத்து எழுதப்பட்ட காவியம் | ||
05 | பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் | வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறு (இரு பாகங்கள்) | ||
06 | 1945 | தமிழர் வீரம்[3] | ||
07 | மாசிலாமணி மாலை[1] | |||
08 | அணி அறுபது[1] | |||
09 | தருமதீபிகை[1] | 7 தொகுப்புகள் | ||
10 | இந்தியத் தாய்நிலை[1] | |||
11 | வீரகாவியம்[1] | |||
12 | கவிகளின் காட்சி தொகுதி-1[1] | |||
13 | கல்வி நிலை[1] |
சான்றடைவு
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 தினமணி செம்மொழிக்கோவை: உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலர், பக்.285
- ↑ கந்தையா பிள்ளை ந. சி.; தமிழ் இலக்கிய அகராதி : இலக்கிய அகர வரிசை; ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 53-56 பவழக்காரத் தெரு, சென்னை -1; 1952; பக்.77
- ↑ கந்தையா பிள்ளை ந. சி.; தமிழ் இலக்கிய அகராதி : இலக்கிய அகர வரிசை; ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 53-56 பவழக்காரத் தெரு, சென்னை -1; 1952; பக்.70