சூ. இன்னாசி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சூ. இன்னாசி
சூ. இன்னாசி
இயற்பெயர்/
அறியும் பெயர்
சூ. இன்னாசி
பிறந்ததிகதி செப்டம்பர் 13, 1934
இறப்பு அக்டோபர் 6, 2010
அறியப்படுவது பேராசிரியர், எழுத்தாளர்

சூ. இன்னாசி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த்துறை உயராய்வு மையத்தின் தலைவராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் கிறித்தவத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவராகவும், திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கத் தமிழ்ப் பேராசிரியர், தலைசிறந்த ஆய்வறிஞர், இலக்கணவாதி, சமூகச் சீர்திருத்தவாதி, மொழிபெயர்ப்பாளர் என்ற பன்முகங்கள் சூ. இன்னாசிக்கு உண்டு. அகராதி, இலக்கணம், இலக்கியம், மொழியியல், திறனாய்வு, ஒப்பாய்வு போன்ற பல்துறைப் புலமை சான்ற இவர் எழுதிய “திருத்தொண்டர் காப்பியம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

இலக்கிய வாழ்க்கை

சூ. இன்னாசி, கல்லூரி இதழ்களிலும், இலக்கிய ஆய்விதழ்களிலும் இலக்கியம் சார்ந்து பல கட்டுரைகளை எழுதினார். சென்னைப் பல்கலைக் கழகம் மூலம் பல நூல்களை வெளியிட்டார். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாகச் செயல்பட்டார். கிறித்தவத் தமிழ் இலக்கியம் தொடர்பான கலைக் களஞ்சியத்தை உருவாக்கினார். இலக்கணம், மொழியியல், அகராதி, மொழிபெயர்ப்பு, கவிதை, நாடகம், புதினம், சிறுகதை, இதழியல் என்று இலக்கியத்தின் பல களங்களில் செயல்பட்டார்.

சூ. இன்னாசி, இங்கிலாந்து, ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அங்கு நிகழ்ந்த கருத்தரங்குகளில் உரையாற்றினார். சிங்கப்பூர், மலேசியாவில் ‘சைவம்’ குறித்துச் சிறப்புரையாற்றினார்.

சூ. இன்னாசி எழுதிய ‘கவிதைச் செல்வம்’ என்ற கிறித்தவக் கலைக் களஞ்சிய நூலில், கிறிஸ்தவ இலக்கியங்களை அந்தாதி, அம்மானை, ஆற்றுப்படை, உலா, கலம்பகம், காப்பியம், கீர்த்தனை, கும்மி, குறவஞ்சி, சதகம், சிந்து, தூது, தொகுப்பு, நாடகம், பதிகம், பள்ளு, பிள்ளைத்தமிழ், புலம்பல், மாலைகள், வண்ணம், வழிபாட்டுப் பாடல்கள், வாழ்வியல் விவிலியம் என வகைப்படுத்தி அகரவரிசைப்படி தொகுத்தார். நூல்களை எழுதியவர் பெயர், எழுதப்பட்ட ஆண்டு, வெளியிட்ட பதிப்பகம் போன்ற செய்திகளும் அத்தொகுப்பில் இடம் பெற்றன.

கவிதைநூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கர்

இன்னாசி கவிதைகள்

நாடகங்கள்

அம்பலத்தாடிகள்

கட்சி மாறிகள்

சாதிவாதிகள்

பட்டங்கட்டிகள்

பொழுது போக்கிகள்

தேசத்தியாகி

நன்கொடை

இன்னாசியின் சிறுகதைகள்

சிக்கனம்

உபசாரம்

உறவு காட்ட ஒருவன்

ஏ ஜோக்ஸ்

ஏமாற்றம்

ஈயத்தைப்பார்த்து

முன்யோசனை

ஸ்டூடண்ஸ் ஆர்..

அன்னதானம்

அதிர்ச்சி

அதிகாரம்

காரியமாகத்தான்

இருபது காசு டிக்கட்

ஓரே வடிவம்

கிழிசல்

வராதது வந்தது

தூறல் நிற்கவில்லை

இலக்கண நூல்கள்

1.எழுத்தியல்

2.சொல்லியல்

3.இலக்கணச் சிந்தனைகள்

4.சிந்தனைக் களங்கள்

கட்டுரை தொகுப்புகள்

  1. இலக்கிய மலர்கள்
  2. மலைபடுகடாம் ஓர் அங்கம்
  3. குறவஞ்சி வளர்ச்சி
  4. சிந்துப்பாடல் (கிறித்துவச் சிந்துப் பாடல்களைப் பற்றி ஒரு கட்டுரையில் பேராசிரியர் விளக்குகிறார். இக்கட்டுரையின் வாயிலாக விளக்கப்படும் சிந்து நூல்கள்: (1) திரு இரட்சணியச் சிந்து, (2) பிளேக் சிந்து, (3) பிளேக் நொண்டிச் சிந்து, (4) கம்பம் தாத்தப்பன் குளச்சிந்து, (5) சல்லிக் கட்டுச்சிந்து, (6) புதுக்கால் சிந்து, (7) சிலுவைச் சிந்து, (8) விதைகிறவன் உவமை நொண்டிச் சிந்து)

கட்டுரைகள்

  1. கம்பராமாயணமும் தேம்பாவணியும்
  2. வள்ளுவக்கதிரும் கம்ப நிலவும்
  3. தலையும் தாளும்
  4. தொண்டர் பெருமை
  5. தேம்பாவணியின் தனித்துவ முனிவன்
  6. தீரத்துறந்தார்
  7. தவநகர்
  8. தமிழ் முனிவருள் ஒரு தனி முனிவர்
  9. திருமொழியில் ஒரு மொழி
  10. தத்துவப்போதகரின்நடை
  11. துணிவிற்கு ஒரு தொண்டர்
  12. மாற்று வடிவங்கள்
  13. தேம்பாவணியில் அன்னைமரி
  14. நற்பெரும் தவத்தள்

களஞ்சியங்களுக்காக எழுதிய கட்டுரைகள்

1.இரட்சணிய சிந்து 2.இலியட் துரை கட்டிடம் 3.இராபர்ட் கால்டு வெல் 4.பார்த்தலோமியோ சீகன் பால்க் 5.சுவாமிகக்கண்ணுப்பிள்ளை எ.டி. 6.சதுரகராதி 7.தனிநாயக அடிகள் 8.விவிலியம் 9.முத்துத்தாண்டவராயன் பிள்ளை 10.தேவியர் ஒழுக்கம் 11.வேத விளக்கம்

இதழ்களில் பேராசிரியரின் கட்டுரைகள்

  1. தேம்பாவணியும் தமிழ் மரபும், 1980
  2. கிறித்தவத் தமிழ் இலக்கியப்பணி 1984
  3. தவமும் வளனும், 1985
  4. இலக்கியப் புதையல் 1989
  5. இயேசு பிறப்பு 19990
  6. செயல்பாடு 1990
  7. யோனாக்கும்மி 1990
  8. இயேசு நாதர் சரிதை 1990
  9. தமிழில் கருவி நூல்கள் 1990
  10. பண்பாட்டுப் பெட்டகம் 1990
  11. மனம் 1990
  12. வாக்கு 1991
  13. காயம் 1991
  14. ஒரு குரல் வள்ளுவன் வழி 1991
  15. உண்மைப் புகழ் 1991

கருத்தரங்கக் கட்டுரைகள்

  1. தமிழ் முனிவர் 1972
  2. புரட்சிக்கவி 1972
  3. வீரமாமுனிவர் உரைத்திறன் 1977
  4. தத்துவப் போதகரின் உரைநடைத் திறன்1978
  5. தோம்பாவணியும் தமிழ் மரபும் 1980
  6. கிறித்தவச் சிந்துப் பாடல்கள் 1984
  7. தேம்பாவணியில் அன்னைமரி 1984
  8. பத்துக் கட்டுரை
  9. தேம்பாவணியில் கீர்த்தனை
  10. தமிழியல் கட்டுரை
  11. வீரமாமுனிவர் ஆசிரியர்
  12. அச்சுக்கலைச் சிக்கல்கள்
  13. மொழிப் பயன்பாடு
  14. தேம்பாவணியின் வாழ்க்கைப் பயன்பாடு
  15. தமிழ் வரலாறு பண்பாட்டியலில் வைணவம்
  16. வீரமாமுனிவரின் இலக்கிய நூல்கள்
  17. கிறித்தவ இலக்கியத்தில் ஆராய்ச்சி
  18. அகராதியில் பிரபஞ்சத் தொகைக் கோட்பாடு
  19. சிலம்பும் வழக்கும்
  20. சிந்தாமணியில் திருமணச் சிந்தனைகள்
  21. தொல்காப்பியத்தில் ஒரு சொல்
  22. பாவேந்தரின் குயில்
  23. ஆய்வுத்திட்டமிடல்
  24. வீரமாமுனிவரின் இலக்கண நூல்கள்
  25. தமிழ் உரைநடை இலக்கியம்


ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=சூ._இன்னாசி&oldid=4253" இருந்து மீள்விக்கப்பட்டது