சூம்வைட்டு
Jump to navigation
Jump to search
| சூம்வைட்டு Shumwayite | |
|---|---|
அரிய சூம்வைட்டு மஞ்சள் பச்சை படிகங்கள் (IMA 2015-058) மாறுபட்ட கருப்பு அணிக்கோவையில் சூம்வைட்டு அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் கிடைத்த கனிமம். | |
| பொதுவானாவை | |
| வகை | சல்பேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | (UO2)2(SO4)2•5H2O |
| இனங்காணல் | |
| படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்சு |
| பிற சிறப்பியல்புகள் | |
| மேற்கோள்கள் | [1] |
சூம்வைட்டு (Shumwayite) என்பது (UO2)2(SO4)2•5H2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஓர் அரிய [2] ஆனால் மிக எளிய யுரேனைல் சல்பேட்டுக் கனிமமாக சூம்வைட்டு கருதப்படுகிறது. அமெரிக்காவின் உட்டா மாநிலம் சான் யூவான் மாகாணத்தில் உள்ள சிம்ப்ளாட்டு சுரங்கத்தில் இக்கனிமம் கண்டறியப்பட்டது.[1]
சூம்வைட்டு கனிமத்தின் கட்டமைப்பு தனித்துவமானதாகும்.[1] ஓரளவிற்கு வேதியியல் ரீதியாக ஒத்த இயற்கை யுரேனைல் சல்பேட்டுகளில் இயாக்கிமோவைட்டு, மெட்டாரானோபிலைட்டு மற்றும் யுரேனோபிலைட்டு ஆகியவை அடங்கும்.[3][4][5]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சூம்வைட்டு கனிமத்தை Smw[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Kampf, A.R., Plášil, J., Kasatkin, A.V., Marty, J.,Čejka, J., and Lapčák, L., 2015. Shumwayite, IMA 2015-058. CNMNC Newsletter No. 27, October 2015, 1228; Mineralogical Magazine 79, 1229–1236
- ↑ "Shumwayite: Shumwayite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-13.
- ↑ "Jáchymovite: Jáchymovite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-13.
- ↑ "Metauranopilite: Metauranopilite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-13.
- ↑ "Uranopilite: Uranopilite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-13.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.