சு. நரேந்திரன்
Jump to navigation
Jump to search
சு. நரேந்திரன் தஞ்சாவூரைச் சேர்ந்த மருத்துவர் ஆவார்.
தமிழ்ப்பணி
அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற இவர் பல ஆண்டுகளாக அறிவியல்தமிழுக்கு அரும் பணியாற்றிவருகிறார்.[1] மிகச்சிறந்த தமிழறிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் உள்ளார்.
அறிவியல் தமிழ்
தமிழில் அறிவியலை மக்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கில் அறிவியல் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார்.
விருதுகள்
சிறந்த நூல் விருது (தமிழக அரசு, 1986), அறிவியல் பரப்புதல் விருது (மத்திய அரசு), இயற்றமிழுக்காக கலைமாமணி விருது (தமிழ்நாடு அரசு, 2010) உள்ளிட்ட 37க்கும் மேற்பட்ட விருதுகளை இவருக்கு பல்கலைக்கழகங்களும், சேவை அமைப்புகளும் வழங்கியுள்ளன.[1]
நூல்கள்
கீழ்க்கண்ட நூல்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.
- நோயை வெல்வோம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1985)
- பொது அறுவை மருத்துவம் (தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)
- கிறித்தவமும் அறிவியலும் (கொற்றவை பதிப்பகம், 2014)
- இரத்த தானம், உடல் உறுப்பு தானம் (கற்பகம் புத்தகாலயம், 2014)[1]
- வயிற்று நோய்களும் அவற்றின் மருத்துவமும் (பூம்புகார் பதிப்பகம்) [2]