சுவாசிகா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுவாசிகா விஜய்
பிறப்புபூஜா[1]
5 நவம்பர் 1990 (1990-11-05) (அகவை 34)
கேழிலம், பெரும்பாவூர், கேரளம், இந்தியா
மற்ற பெயர்கள்சுவாசிகா விஜய்[2]
பணிநடிகர் நடனம், விளம்பர நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபவர்.
செயற்பாட்டுக்
காலம்
2009 முதல் தற்போது வரை

சுவாசிகா (Swasika) இவர் ஓர் இந்திய நடிகர். இவர் பெரும்பாலும் மலையாளத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களிலும் ஒரு சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான "வைகை" என்றப் படத்தில் அறிமுகமானார். தொலைக்காட்சி தொடரான "தத்துபுத்திரி" மூலம் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே நன்கு அறியப்பட்டவர்.[1]

தொழில்r

இவரது முதல் படம் சுந்தரபாண்டியின் இயக்கத்தில் வெளிவந்த "வைகை", ஒரு காதல் கதையாக இருந்தது. அதில் இவருடைய பாத்திரம் உண்மையான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.[3] பிறகு, 2010இல் ராசு மதுரவன் இயக்கத்தில் கோரிப்பாளையம் என்ற படத்தில் நடித்தார், அதில் இவர் இரண்டாவது முன்னணி வேடத்தில் நடித்தார். இவர் படத்தில் நடித்தபோது ஒரு மாணவியாகவே இருந்தார்.[1] 2011இல் இவரது மூன்றாவது படமான "மைதானம்" படத்தில் நடித்ததற்காக விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார்.[3] அதில் இவர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மதிக்கும் ஒரு கிராமியப் பெண்மணியாக நடித்தார்,[3]

இவரது அடுத்த படமான இயக்குனர் சீலனின் "கண்டதும் காணாததும்" என்றப் படத்தில் நகரத்தில் வளரும் ஒரு கல்லூரிப் பெண்ணாக நடித்திருந்தார்.[3] 2012இல் இவர் சினிமா கம்பெனி என்ற படத்தில் மூலம் மலையாளத் திரையில் அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டில் சஜீவன் அந்திக்காடுவின் பிரபுவின்டே மக்கள் என்றப் படத்தின் முன்னணி பாத்திரத்தில் தோன்றினார்.[1] 2014 தமிழ் திகில்ப் படம் "பண்டுவம்" படத்தில் இவர் ஒரு மனநல மருத்துவராக, நவீனமான பாத்திரத்தில் நடித்தார்.[4][5] இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபவராக பணிபுரிந்தார். 2014 இல், ஜீவன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் இவர் மழவில் மனோரமாவில் "தத்துபுத்திரி" என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். இவர் ஒரு சில விளம்பரங்களிலும் தோன்றினார்.

2017 ஆம் ஆண்டில் இவரது அடுத்த தொலைக்காட்சி தொடரான "மை மருமகன்" சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் சிந்தவிஸ்தாயா சீதா என்ற தொடர் ஏஷியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோது இவரது புகழ் மலையாள பார்வையாளர்களிடையே பரவியது. இவர் தற்போது ஃபிளவர்ஸ் மலையாள தொலைக்காட்சியில் சிந்தவிஸ்தாயா சீதா என்ற தொடரின் தொடர்ச்சியான "சீதா" வில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ஒரு பிரணாயினி தொடரில் கையெழுத்திட்டார். ஆனால் பின்னர் விலகிக் கொண்டார். மேடை நிகழ்ச்சிகளில் முக்கியமாக ஒரு நடன கலைஞராக இவர் செயல்படுகிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் தோன்றி வருகிறார்.

குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Swasika goes back to her roots - The Times of India". articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2013-11-10. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Kandathum Kanathathum - Chennai - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
  3. 3.0 3.1 3.2 3.3 "Swasika loves playing a village belle - The Times of India". articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2014-01-03. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "Panduvam is a Revenge Thriller | Silverscreen.in". silverscreen.in. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
  5. "Swasika turns glamorous". deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சுவாசிகா&oldid=22821" இருந்து மீள்விக்கப்பட்டது