சுவர்ணவாஹினி
Type | ஒளிபரப்பாக்கம் |
---|---|
Country | இலங்கை |
Availability | தேசிய அளவில் |
Owner | ஈஏபி எதிரிசிங்க நிறுவனம் |
Launch date | மார்ச்சு 16, 1997 |
Official website | http://www.swarnavahini.lk/ |
சுவர்ணவாகினி தொலைக்காட்சி (Swarnavahini) இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள மொழித் தொலைக்காட்சிச் சேவையாகும். மார்ச்சு 16 1997ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை ஈஏபி எதிரிசிங்க நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது.[1][2][3] [3] இதன் சகோதர சேவையாக ஈ.டி.வி தொலைக்காட்சி ஆங்கில சேவையை வழங்குகின்றது. இது இலங்கையின் முதல் தனியாருக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாகும்.[4][4] ஈஏபி எதிரிசிங்க நிறுவனம் 1994ம் ஆண்டு தொடக்கம் ஈ.டி.வி -1 (E.T.V - 1) ஈ.டி.வி -2 (E.T.V - 2) என்ற ஆங்கில சேவைகளை ஆரம்பித்தது. அதில் ஒன்று 1997ல் சுவர்ணவாஹினி என்ற சிங்கள மொழி ஒளிபரப்பாக மாற்றம் அடைந்தது.[1]
சுவர்ணவாகினி செய்திகள், விவரண நிகழ்ச்சிகள், அரசியல் விவாதங்கள், சிறுவர் நிகழ்ச்சிகள், இசை, நிகழ்ச்சிகள் நாடகங்கள் எனப் பல்வேறுபட்ட சிங்கள மொழி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகின்றது.[5][6][7] செய்திகள் சிங்கள மொழியில் மட்டுமே தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகின்றன. உள்நாட்டுத் தயாரிப்புக்கள் மூலம் சிங்கள மொழி பேசுபவர்களுக்கான தனியார் ஒளிபரப்புச் சேவையாக திகழ்கிறது.[8][9]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 "EAP Broadcasting Company Limited: Debenture Issue 2015" (PDF). Colombo Stock Exchange. p. 39.
- ↑ "EAP Broadcasting Company Limited: Debenture Issue 2015" (PDF). Colombo Stock Exchange. p. 38.
- ↑ 3.0 3.1 "EAP Broadcasting Company Limited: Debenture Issue 2015" (PDF). Colombo Stock Exchange. p. 4.
- ↑ 4.0 4.1 "Sri Lanka". Press Reference.
- ↑ "Channels". Dialog TV.
- ↑ "List of Channels on Dialog TV". TV Channels List.
- ↑ "Packs: Ntertainment". Dish TV (Sri Lanka).
- ↑ "List of Channels". Lanka Broadband Networks. Archived from the original on 20 March 2014.
- ↑ "Channel Lineup". PEO TV.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Family Doctor to cure tele diseases
- Dance Stars Dance on Swarnavahini