சுவசுத்திகா அருளிங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இயற்பெயர்/
அறியும் பெயர்
சுவாசுத்திக்கா அருளிங்கம்
Swasthika Arulingam
பணி வழக்கறிஞர்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது மனித உரிமைச் செயற்பாட்டாளர், பெண்ணியவாதி

சுவசுத்திகா அருளிங்கம் (Swasthika Arulingam) இலங்கையைச் சேர்ந்த ஒரு மனித உரிமை வழக்கறிஞராவார். பெண்கள் உரிமை ஆர்வலர், மனித உரிமை ஆர்வலர் மற்றும் அரசியல் ஆர்வலர் என இவருக்கு பலமுகங்கள் உண்டு. விடுதலை இயக்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.[1] [2]

தொழில்

ஒரு வழக்கறிஞராக சட்டத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். பாலின அடிப்படையிலான வன்முறைக்கு ஆளாகக்கூடிய பெண்களின் அவலத்தை அடிக்கடி எடுத்துக்காட்டும் பல்வேறு பொது மன்றங்கள் மற்றும் பொதுக் களங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காக வாதிடுகிறார்.[3]

வடக்கு மற்றும் கிழக்கு திட்ட ஆதரவு பிரிவுக்கான சட்ட உதவி ஆணையத்தில் திட்ட மேலாளராகவும் சுவாஸ்திக்கா அருளிங்கம் பணியாற்றினார்.[4] ராசபக்சே ஆட்சியை கடுமையாக விமர்சித்தவராகவும், இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியின் அவசியத்தை வெளிப்படுத்தியவராகவும் அறியப்படுகிறார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதி எம்.ஏ.சுமந்திரனுடன் 2018 இல் இவர் முகநூலில் பேசியது கொழும்பு டெலிகிராஃபு என்ற இலங்கை இணையதளத்தில் கட்டுரையாகத் தொகுக்கப்பட்டது.[5]

2020 சூன் 9 ஆம் தேதியன்று கொழும்பில் கருப்பர் உயிரும் உயிரே என்ற இயக்கத்தின் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டது குறித்து விசாரிக்க முயன்றபோது, இவர் இலங்கை காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார். பல மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுவசுத்திகா மறுநாள் விடுவிக்கப்பட்டார்.[6]

2021 சூலை 13 ஆம் தேதியன்று தொழிலாளர் ஐக்கிய கூட்டமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற முதல் பெண் உறுப்பினர் என்ற சிறப்புக்கு உரியவரானார். வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.[7]

2022 மார்ச்சு மாதம் முதல் நடைபெற்று வரும் இலங்கைப் போராட்டங்களில் தன்னார்வப் பிரதிநிதியாக இவர் அதில் ஈடுபட்டு வருகிறார். அதிகாரப் போராட்டத்தில் அமைதியான எதிர்ப்பாளர்களின் உரிமைகளுக்காக வாதிட்டும் வருகிறார்.[8] காலியில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு போராட்ட அமைப்பாளராக முன்னணியில் இருந்தார். மக்கள் போராட்டத்தின் சார்பாக ஒரு சமூக ஆர்வலராக வாதிடுகிறார்.[9] [10]

மேற்கோள்கள்

  1. Science, London School of Economics and Political. "Summer Term 2020" (in en-GB). https://www.lse.ac.uk/south-asia-centre/events/archive/Summer-Term-2020.aspx. 
  2. "Government of Sri Lanka, bring our migrant workers home! | Daily FT" (in English). https://www.ft.lk/opinion/Government-of-Sri-Lanka-bring-our-migrant-workers-home/14-711158. 
  3. "‘Men must take responsibility for GBV’" (in en-US). 2021-03-01 இம் மூலத்தில் இருந்து 2021-07-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210711101535/https://www.themorning.lk/men-must-take-responsibility-for-gbv/. 
  4. Nadeera, Dilshan. "Gender-based violence" (in en-US). http://island.lk/gender-based-violence/. 
  5. "Will TNA Vote For The Draconian Counter Terror Act?" (in en-US). 2018-10-23. https://www.colombotelegraph.com/index.php/will-tna-vote-for-the-draconian-counter-terror-act/. 
  6. "Sri Lankan police release lawyer after arrests at Black Lives Matter protest | Tamil Guardian". https://www.tamilguardian.com/content/sri-lankan-police-release-lawyer-after-arrests-black-lives-matter-protest. 
  7. "‘Female-headed TUs are sidelined by male TU leaders’" (in en-US). 2021-08-16 இம் மூலத்தில் இருந்து 2021-08-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210817072152/https://www.themorning.lk/female-headed-tus-are-sidelined-by-male-tu-leaders/. 
  8. "The democratic moment today; a call for action and reflection | Daily FT" (in English). https://www.ft.lk/opinion/The-democratic-moment-today-a-call-for-action-and-reflection/14-733366. 
  9. "Occupied public property to be returned to state" (in en). 2022-07-14. https://www.newsfirst.lk/2022/07/14/occupied-public-property-to-be-returned-to-state/. 
  10. "Protesters handover occupied state buildings - Front Page | Daily Mirror" (in English). https://www.dailymirror.lk/front_page/Protesters-handover-occupied-state-buildings/238-241113. 
"https://tamilar.wiki/index.php?title=சுவசுத்திகா_அருளிங்கம்&oldid=24114" இருந்து மீள்விக்கப்பட்டது