சுமலதா
Jump to navigation
Jump to search
சுமலதா | |
---|---|
சுமலதா | |
பிறப்பு | ஆகத்து 27, 1963 சென்னை |
மற்ற பெயர்கள் | சுமலதா அம்பரீஷ் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1979 - தற்போது |
வாழ்க்கைத் துணை | அம்பரீஷ் |
சுமலதா (பிறப்பு 27 ஆகஸ்ட் 1963) இந்தியத் திரைப்பட நடிகை மஞ்சுளா ஆவார். இவர் இருநூற்றிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரைப்படங்கள், மலையாளத் திரைப்படங்கள், கன்னடத் திரைப்படங்கள் மற்றும் இந்தித் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார்.
வரலாறு
இவர் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் 1963 இல் பிறந்தவர். மலையாளத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இவர், கன்னடத் திரைப்பட நடிகரான அம்பரீஷை திருமணம் செய்து கொண்டார். தற்போது பெங்களூரில் வசிக்கின்றார்.
திரைப்படங்கள்
தமிழ்
- கரையெல்லாம் செண்பகப்பூ (1981) (தமிழ்)
- குடும்பம் ஒரு கதம்பம் (1981) (தமிழ்)
- முரட்டுக் காளை (1980) (தமிழ்)
- ஒரு ஓடை நதியாகிறது (1983) (தமிழ்)
அரசியல்
பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன், சுயேட்சை வேட்பாளரான நடிகை சுமலதா, 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மண்டியா மக்களவைத் தொகுதியிலிருந்து வென்றார்.[1]