சுந்தா சுந்தரலிங்கம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வீ. சுந்தரலிங்கம் |
---|---|
பிறப்புபெயர் | வீரசிங்கம் சுந்தரலிங்கம் |
பிறந்ததிகதி | 5 நவம்பர் 1930 |
பிறந்தஇடம் | சாவகச்சேரி, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை |
இறப்பு | அக்டோபர் 29, 2001 | (அகவை 70)
பணி | வானொலி ஒலிபரப்பாளர் |
கல்வி | சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி |
பணியகம் | இலங்கை வானொலி, பிபிசி தமிழோசை |
அறியப்படுவது | வானொலி ஒலிபரப்பாளர், நாடக நடிகர் |
பெற்றோர் | வீரசிங்கம் |
துணைவர் | பராசக்தி |
பிள்ளைகள் | சுபா |
சுந்தா சுந்தரலிங்கம் (வீரசிங்கம் சுந்தரலிங்கம், நவம்பர் 5, 1930 – அக்டோபர் 29, 2001) இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளரும், வானொலி நாடக நடிகரும் ஆவார். பின்னர் பிபிசி தமிழோசை நிகழ்ச்சியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சந்திரனில் இறங்கிய அப்பல்லோ விண்வெளி யாத்திரை பற்றிய நேர்முகவர்ணனை செய்தவர் என்பதினால் 'அப்பலோ' சுந்தா என்று அழைக்கப்பட்டவர். ஒளிப்படக் கலையிலும் தேர்ச்சி மிக்கவர்.[1][2][3]
வாழ்க்கைக் குறிப்பு
சுந்தரலிங்கம் யாழ்ப்பாணம் தென்மராட்சியில் சாவகச்சேரியில் கோவில் குடியிருப்பு என்ற சிற்றூரில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், உயர் கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கற்றார். 1951 ஏப்ரலில் கொழும்பு நகரில் இலங்கை கணக்காய்வாளர் திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். இவர் பின்னர் இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும், இலங்கை நாடாளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர்.[2] புலம்பெயர்ந்து, அமெரிக்காவிலும், இந்தியாவிலும், அவுஸ்திரேலியாவிலும் வாழ்ந்தவர்.
வானொலியில்
இலங்கை வானொலியில் வீ. சுந்தரலிங்கம் என்ற பெயரில் செய்திகள், நேர்முக வர்ணனை என்பனவற்றோடு பஞ்சபாணம், விவேகச்சக்கரம் முதலான போட்டி நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கியிருக்கிறார். பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சியில் சுந்தா சுந்தரலிங்கம் என்ற பெயரில் அறிவிப்பாளராக இருந்தவர்.[2]
நாடக நடிகர்
எழுதிய நூல்
படைப்பு இலக்கியத் துறையில் இவர் தீவிரமாக ஈடுபடாத போதிலும் தனது வானொலி அனுபவங்களை 1999 இல் மன ஓசை என்னும் பெயரில் எழுதி வெளியிட்டிருக்கிறார்.[1]
இறுதி நாட்கள்
தனது இறுதிக் காலங்களில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே வானலைகளில் தமது குரலைப் பதிவு செய்தவர்.[1] இவரது மனைவி பராசக்தி சுந்தரலிங்கம் ஒரு இலக்கிய விமரிசகர்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 அப்பல்லோ ‘சுந்தா’ சுந்தரலிங்கம் நினைவுகள், லெ. முருகபூபதி
- ↑ 2.0 2.1 2.2 "வணக்கம் கூறி விடை பெறுவது சுந்தா சுந்தரலிங்கம்" இம் மூலத்தில் இருந்து 2016-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161013093035/http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.
- ↑ ‘மனஓசையில்’ மனந்திறந்து பேசியிருக்கும் வானொலி ஊடகவியலாளர், லெ. முருகபூபதி, தினக்குரல், அக்டோபர் 29, 2020