சுதாங்கன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுதாங்கன்
Sudhangan
பிறப்புரங்கராசன்
1958
திருநெல்வேலி, தாமிரபரணி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு12 செப்டம்பர் 2020
தேசியம்இந்தியன்
பணிபத்திரிகையாளர், நிருபர், ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், கட்டுரையாளர், அரசியல் ஆய்வாளர் மற்றும் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1978–2019
அறியப்படுவதுபுலனாய்வு இதழியல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சுட்டாச்சு சுட்டாச்சு
வாழ்க்கைத்
துணை
சாந்தி ரங்கராசன்
பிள்ளைகள்ஆக்காசு ரங்கராசன்

சுதாங்கன் (Sudhangan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளராவார். 1958 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ரங்கராசன் என்பது சுதாங்கனின் இயற்பெயராகும். சுதாங்கன் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணிக் கரையோரத்தில் அமைந்துள்ள தென் திருப்பதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

பத்திரிகையாளர், நிருபர், ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், கட்டுரையாளர், அரசியல் ஆய்வாளர் மற்றும் நடிகர் என்ற பன்முகங்களுடன் சுதாங்கன் தமிழ் பத்திரிகை உலகில் இயங்கினார். சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் இவர் நடித்தார். தமிழ் மொழி ஊடகங்களில் புலனாய்வு இதழின் தூணாகக் கருதப்பட்டார். தமிழ் சினிமா மற்றும் அரசியலை அடிப்படையாகக் கொண்ட வெளியீடுகளுக்காக சுதாங்கன் நன்கு அறியப்பட்டார்.[1] நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல் மற்றும் ஒரு நாவலையும் சுதாங்கன் வெளியிட்டார். மறைந்த முதல்வர் செயலலிதா உட்பட தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகளுடன் நெருக்கமான தொடர்புகளுக்காகவும் சுதாங்கன் நன்கு அறியப்படுகிறார்.

தொழில்

தனது இளம் வயதிலேயே சுதாங்கன் அறிக்கைகளைப் படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் காட்டினார். படிக்கிற காலத்தில் ’வானவில்’ என்ற ஒரு கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். 1978 ஆம் ஆண்டில் திசைகள் தமிழ் வார இதழின் நிருபராக தனது ஆரம்பகால வாழ்க்கையைத் தொடர்ந்தார். திசைகளுடன் சுமார் ஆறு மாதங்கள் பணியாற்றிய பிறகு, குமுதம் பத்திரிகையில் பகுதிநேர நிருபராகச் சேர்ந்தார். மற்றொரு குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராசன் பெயருடன் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக குமுதம் குழுவில் இணைந்தவுடன் இவர் தனது இயற் பெயரை சுதாங்கன் என்று மாற்ற வேண்டியிருந்தது. ரா.கி. ரங்கராசன் ஏற்கெனவே பத்திரிகைத் துறையில் வெற்றி பெற்ற நபராக இருந்தார்.[1]

பின்னர் குமுதம் பத்திரிகையை விட்டு 1982 ஆம் ஆண்டு விகடன் குழுவில் சேர்ந்தார். சூனியர் விகடனில் ஒரு ஆசிரியராக சேர்ந்து உண்மையில் புதிய அறிக்கையிடல் முறைகள் மற்றும் நுட்பங்களை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக புலனாய்வு இதழியலுக்கு முக்கிய சில வழிகளை வகுத்தார்.[2][3] பத்திரிகையின் தலைமை ஆசிரியராக உயர்ந்த சுதாங்கன் 1992 ஆம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார். பின்னர் தினமணி மற்றும் தமிழன் எக்சுபிரசு ஆகிய தமிழ் வார இதழ்களில் பணிபுரிந்தார்.

மூத்த நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் எம்ஆர் ராதா இடையேயான ஆக்கப்பூர்வமான வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகள் பற்றி சித்தரிக்கப்பட்ட அவரது பிரபலமான புத்தகம் சுட்டாச்சு சுட்டாச்சு தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையானது . சுதாங்கன் தொடக்கத்தில் சனவரி 1967 இல் எம்ஜிஆரின் தோல்வியுற்ற படுகொலை முயற்சியின் அடிப்படையில் தினமணியின் தலையங்க வெளியீடாக இந்தப் படைப்பை வெளியிட்டார். இதுவே பின்னர் சுட்டாச்சு சுட்டாச்சு என்ற பெயரில் புத்தகமாக மாற்றப்பட்டது.[4]

சுதாங்கன் தொலைக்காட்சியில் சேர்ந்து நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார். 1996 ஆம் ஆண்டில் சிடார் விஜய்யுடன் ஒரு அரசியல் நிகழ்நேர தொலைக்காட்சி நிகழ்ச்சியின் அரசியல் ஆய்வாளராக சேர்ந்தார். பின்னர் மறைந்த மூத்த திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரின் மின்பிம்பங்கள் நிறுவனத்தில் சேர்ந்தார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 2001 ஆம் ஆண்டு முதல் சுதாங்கன் ஜெயா தொலைக்காட்சியில் சேர்ந்தார் 2005 ஆம் ஆண்டு வரை அங்கு தொலைக்காட்சித் தொகுப்பாளராக பணியாற்றினார்.[5]

ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களில் பத்திரிக்கையின் நவீன சித்தரிப்பையும் சுதாங்கன் விமர்சித்தார். தமிழ்நாட்டின் நவீன பத்திரிகை சமூகத்திற்கு ஒரு துல்லியமான மற்றும் தெளிவான செய்தியை தெரிவிக்க முடியவில்லை என்றார்.[6] பத்திரிகைத் துறையில் சிறந்த சாதனைகளுக்காக கொல்கத்தாவில் சிடேட்சுமேன் விருதை வென்றார். இன்றுவரை, இந்த விருதைப் பெற்ற ஒரே தென்னிந்திய பத்திரிகையாளர் சுதங்கன் மட்டுமே என்ற சிறப்பு இவருக்கு உண்டு.[7]

இறப்பு

2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று 63 வயதில் சுதாங்கன் நுரையீரல் நோயால் இறந்தார்.[8][1]

திரைப்படவியல்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Saju, M. T. (September 13, 2020). "Veteran Tamil journalist Sudhangan dies aged 63". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.Saju, M. T. (13 September 2020). "Veteran Tamil journalist Sudhangan dies aged 63". The Times of India. Retrieved 14 September 2020.
  2. "சுதாங்கன் நினைவுகள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-08-04.
  3. ஆ.பழனியப்பன். "மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்!". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
  4. "Journalist Sudhangan passes away" (in en-IN). The Hindu. 2020-09-13. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/tamil-nadu/journalist-sudhangan-passes-away/article32590712.ece. 
  5. 100010509524078 (2020-09-12). "Senior journalist Sudhangan passes away at 63". dtNext.in (in English). Archived from the original on 2020-09-22. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14. {{cite web}}: |last= has numeric name (help)
  6. Oct 27, Srimathi Sridharan / TNN /; 2016; Ist, 09:17. "In Tamil movies, honest journalist turns unscrupulous operative | Chennai News - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-09-14. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  7. "மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
  8. Lakshmi, Dhana (2020-09-12). "மூத்த பத்திரிக்கையாளார் சுதாங்கன் உடல்நலக் குறைவால் காலமானார்!". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
"https://tamilar.wiki/index.php?title=சுதாங்கன்&oldid=21803" இருந்து மீள்விக்கப்பட்டது