சுண்டாட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுண்டாட்டம்
இயக்கம்பிரம்மா ஜி. தேவ்
தயாரிப்புஆர். அண்ணாதுரை
திரைக்கதைபிரம்மா ஜி. தேவ்
இசைபிரிட்டோ மைக்கேல்
அச்சு இராஜாமணி (பின்னணி இசை)
நடிப்புஇர்பான்
அருந்ததி
மது
ஸ்டாலின்
ஆடுகளம் நரேன்
ஒளிப்பதிவுபாலகுருநாதன்
படத்தொகுப்புஎல்விகே. தாஸ்
கலையகம்பிலிம் பேம் புரொடக்‌ஷன்
வெளியீடு8 மார்ச்சு 2013 (2013-03-08)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுண்டாட்டம் (Sundaattam) பிரம்மா ஜி. தேவ் எழுதி இயக்கி வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இர்பான் நாயகனாகவும், அருந்ததி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். படத்துக்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். மாலை பொழுதின் மயக்கத்திலே பட புகழ் அச்சு, பின்னணி இசையை மேற்கொண்டார்.[1] வட சென்னையின் ராயபுரம் பகுதியில் நடக்கும் கேரம் சூதாட்டத்தை அடிப்படையாகக் கொண்ட படமாக எடுக்கப்பட்டது.[2] 1990களில் சென்னையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படம், 8 மார்ச் 2013 அன்று வெளியிடப்பட்டு ,சராசரி விமர்சனங்களையே பெற்றது.[3]

நடிப்பு

  • பிரபாகரனாக இர்பான்
  • கலைவாணியாக அருந்ததி
  • காசியாக மது
  • பாக்யா அண்ணாச்சியாக ஆடுகளம் நரேன்
  • குணாவாக ஸ்டாலின்
  • உமாவாக மிஷா கோஷல்

ஒலிப்பதிவு

படத்துக்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்திருந்தார். இந்த இசைத் தொகுப்பு விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[4]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சுண்டாட்டம்&oldid=33445" இருந்து மீள்விக்கப்பட்டது