சுங்கை காடுட்
சுங்கை காடுட் | |
|---|---|
Sungai Gadut | |
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: நெகிரி செம்பிலான் | |
| சுங்கை காடுட் தொடருந்து நிலையம் சுங்கை காடுட் தொடருந்து நிலையம் | |
| ஆள்கூறுகள்: 2°40′N 102°00′E / 2.667°N 102.000°E | |
| நாடு | |
| மாநிலம் | சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: நெகிரி செம்பிலான் |
| மாவட்டம் | சிரம்பான் |
சுங்கை காடுட் (ஆங்கிலம்: Sungai Gadut; மலாய் மொழி: Sungai Gadut) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம் சார்ந்த நகரம் ஆகும். சிரம்பான் நகர மையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சுங்கை காடுட் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. அனைத்துலக அளவில் சில நிறுவனங்கள் தொழிற்சாலைகளை நிறுவி உள்ளன. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் செனவாங் தொழிற்சாலைப் பகுதி, மாநிலத்தின் இரண்டாவது மிக முக்கியமான தொழில்துறைப் பகுதியாக விளங்குகிறது.
பொது
இந்த நகரப் பகுதி மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை படிமம்:Mes-e2.svg (North–South Expressway Southern Route); செனவாங் சந்திப்பு (Senawang Junction); கூட்டரசு சாலை 1 (மலேசியா) படிமம்:MYS Jkr-ft1.svg FT 1; மற்றும் சுங்கை காடுட் சாலை N5 வழியாக இணைக்கப்பட்டு உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்
- பத்து அம்பார்
- ரெம்பாவ்
- குண்டோர்
- சுங்கை காடுட்
- சிரம்பான்
- செனவாங்
அருகிலுள்ள வீடுமனை குடியிருப்புகள்
- தாமான் துவாங்கு ஜபார் - Taman Tuanku Jaafar
- பண்டார் சிரம்பான் செலாத்தான் - Bandar Seremban Selatan
- தாமான் பெங்கீரான் செனவாங் - Taman Pinggiran Senawang
- தாமான் செனவாங் பெர்டானா - Taman Senawang Perdana
- லாடாங் சிரம்பான் - Ladang Seremban
- கம்போங் உலு ரந்தாவ் - Kg. Ulu Rantau
- தாமான் ஸ்ரீ பெர்த்தாமா - Taman Sri Pertama
சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
சுங்கை காடுட் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 565 மாணவர்கள் பயில்கிறார்கள். 44 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[1][2]
| பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
|---|---|---|---|---|---|---|
| NBD4081 | சிரம்பான் தோட்டம் | SJK(T) Ladang Seremban | சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | சுங்கை காடுட் | 565 | 44 |
மேற்கோள்
- ↑ "மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் - Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. Retrieved 2021-11-28.
- ↑ "SJK(T) Ladang Seremban - This school has been selected for School Transformation Programme 2025 (TS25) by Ministry of Education". commchest.org.my. Retrieved 18 June 2022.