சுஊனுல் இஸ்லாம் (சிற்றிதழ்)
Jump to navigation
Jump to search
சுஊனுல் இஸ்லாம் இலங்கை கொழும்பிலிருந்து 1984ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
வெளியீடு
இலங்கை முஸ்லிம் சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
பொருள்
"சுஊனுல் இஸ்லாம்" என்றால் "இஸ்லாமியச் செய்திகள்" என்று பொருள்படும்
உள்ளடக்கம்
இது இலங்கையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஒரு இதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இலங்கை முஸ்லிம்கள் பற்றிய தகவல்களை இது அதிகளவில் வெளிப்படுத்த முயற்சி செய்திருந்தது.
ஆதாரம்
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்