சீலா ராஜ்குமார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சீலா ராஜ்குமார்
பிறப்பு14 செப்டம்பர் 1992 (1992-09-14) (அகவை 32)
சவேரியார்பட்டி, ஜெயங்கொண்டம், அரியலூர், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்சீலா
கல்விஎம்.ஏ பரதநாட்டியம்
பணிநடிகர், நடனக் கலைஞர், நடனப்பயிற்சியாளர்
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போது
வாழ்க்கைத்
துணை
தம்பிச் சோழன் (ராஜ்குமார்)

சீலா ராஜ்குமார் (Sheela Rajkumar, பிறப்பு:14 சூன் 1992) ஒரு தமிழ் நடிகை மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞர்.[1] இவர் 2012 ஆம் ஆண்டில் திரைத்துறைக்கு அறிமுகமானார். பின்னர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். குறிப்பாக அழகிய தமிழ் மகள் (2017) என்ற ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடரில் தனது முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.[2]

ஆரம்ப ஆண்டுகள்

சீலா தமிழ்நாட்டின், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சவேரியார்பட்டி என்ற சிற்றூரில் பிறந்து வளர்ந்தார். இவர் தன் பள்ளிப்படிப்பை ஜெயங்கொண்டத்தில் உள்ள புனித பாத்திமா உறைவிடப் பள்ளியில் பயின்றார். பள்ளியில் மாறுவேடப்போட்டி, நடனப் போட்டிகளில் கலந்து‌ கொண்டு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். திருச்சிராப்பள்ளி கலைக்காவேரி கவின்கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை என இரண்டிலும் பரதநாட்டியம் பயின்றார். திருச்சிராப்பள்ளியில் நடிப்புப் பயிற்சிப் பட்டறைகளை நடத்த வந்த குழுவைச் சேர்ந்த தம்பிச் சோழனை (ராஜ்குமார்) மணந்தார்.[3]

திரைப்பட வரலாறு

சீலாவின் கணவர் வழியாக கூத்துப்பட்டறையின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. கூத்துப்பட்டறையில் நாடகங்கள் நடித்தார். திரைப்பட இயக்குநர் அறிவழகன் இவரை ஆறாது சினம் படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு இவர் நடித்த டூலெட் படத்தின் வழியாக பிரபலமானார். 2017 ஆம் ஆண்டில், சீலா தனது முதல் தமிழ் தொடரான அழகிய தமிழ் மகள்[4] தொலைக்காட்சி தொடரில் நடித்தார். இத்தொடரில் புவியரசு [5] என்பவரின் இணையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்தார்.

தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு பங்கு குறிப்பு
2017–2019 அழகிய தமிழ் மகள் பூங்கொடி
2017 லிவின் தேன் வலை தொடர்
2020 சாக்சி சாக்சி குறும்படம்

திரைப்படங்கள்

  • குறிப்பில் எதுவும் குறிப்பிடாதவை எல்லாம் தமிழ் படங்களாகும்.
ஆண்டு படம் Role குறிப்புகள்
2016 ஆறாது சினம் மலர்
2017 டூலெட் அமுதா
மனுசங்கடா
2018 அசுரவதம் கஸ்தூரி
2019 கும்பளங்கி நைட்ஸ் சாத்திரி மலையாளம்
நம்ம வீட்டு பிள்ளை துளசியின் தாய்
2020 திரௌபதி திரௌபதி
2021 மண்டேலா தேன்மொழி
TBA மாயத்திரை தயாரிப்பில்

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சீலா_ராஜ்குமார்&oldid=22783" இருந்து மீள்விக்கப்பட்டது