சீனப் புத்தாண்டு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
chinese lanterns
சீனப் புத்தாண்டு
Year of the Rat.jpg
மான்செஸ்டரில் சீன புத்தாண்டு
கடைபிடிப்போர்சீனர்
வகைபண்டிகை, சீனா
மலேசியா
சிங்கப்பூர்
முக்கியத்துவம்சீனப் புத்தாண்டு,
கொண்டாட்டங்கள்டிராகன் நடனம், சிங்க நடனம், பகிர்ந்து உண்ணுதல், பரிசு கொடுப்பது, உறவுகளைக் காணுதல், பட்டாசு வெடித்தல்
நாள்சீன நாட்காட்டியில் முதல் நாள்

சீனப் புத்தாண்டு (Chinese New Year) ஒரு முக்கியமான சீனத் திருவிழா ஆகும். இது சந்திர-சூரிய சீன நாட்காட்டியின் துவக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் நேரடி மொழிபெயர்ப்பு "வசந்த விழா" ஆகும். கொண்டாட்டங்கள் பாரம்பரியமாக சீன நாட்காட்டியின் முதல் நாளுக்கு முந்தைய நாள் மாலை முதல் 15-ம் நாள் வரை கொண்டாடப்படுகிறது. புத்தாண்டின் முதல் நாள் சனவரி 21 மற்றும் 20 பிப்ரவரி இடையே அமாவாசையை அடுத்து வரும் புதிய நிலவு தோன்றுவதுடன் ஆரம்பமாகின்றது.[1] 2016 ஆம் ஆண்டில், சீனப் புத்தாண்டின் முதல் நாள் பிப்ரவரி 8 ஆம் தேதி, திங்கள் ஆரம்பமாகின்றது.[2]

சீனப் புத்தாண்டு சீனா, ஹாங்காங், மக்காவு, தைவான், சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மொரிசியசு, மற்றும் பிலிப்பீன்சு உட்பட சீன மக்கள் கணிசமாக உள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சீனப்_புத்தாண்டு&oldid=29405" இருந்து மீள்விக்கப்பட்டது