சீத்தலைச்சாத்தனார் இயற்றிய திருவள்ளுவமாலைப் பாடல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

புலவர் பெயர்களைப் பதித்து உருவாக்கப்பட்ட நூல்களில் ஒன்று திருவள்ளுவமாலை. இதில் ”சீத்தலைச்சாத்தனார்” என்னும் பெயரில் அடைவு செய்யப்பட்டுள்ள பாடல் ஒன்று உள்ளது.

மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்.

மூன்று எனச் சிலவற்றைத் தொகை செய்து அவற்றோடு முப்பால் எனப்படும் திருக்குறளை இந்தப் பாடல் ஒப்புமைப் படுத்திக் காட்டுகிறது. மூவேந்தர் தலைமுடிமேல் பனை, வேம்பு, ஆத்தி ஆகிய தலைமாலைகள் உள்ளன. திருக்குறளிலுள்ள முப்பால் அந்தத் தலைமாலைகளைப் போன்றது என உயர்த்திப் பேசுகிறது.