சி. விஜயதரணி
சி. விஜயதரணி | |
---|---|
2020 இல் சி. விஜயதரணி | |
முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 23 மே 2011 – 24 பிப்ரவரி 2024 | |
தமிழக முதல்வர் |
|
முன்னவர் | ஜி. ஜான் ஜோசப் |
தொகுதி | விளவங்கோடு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அக்டோபர் 13, 1969 கன்னியாகுமரி, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
இந்திய தேசிய காங்கிரசு (2024 வரை) |
வாழ்க்கை துணைவர்(கள்) | சிவகுமார் கென்னடி (இற. 2016) [1]
|
பிள்ளைகள் | 2 |
இருப்பிடம் | சென்னை |
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
சி. விசயதரணி (S Vijayadharani) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4] 24 பிப்ரவரி 2024 இல் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்.[5]
குடும்பம்
இவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தியாவார்.[6] விசயதரணியின் பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். அவரது தாயார் பகவதி, 1977-ஆம் ஆண்டில், தமிழ்நாடு மகளிர் காங்கிரசு தலைவராக இருந்தவர். விஜயதரணி ஒன்பது வயதாக இருக்கும் போது தந்தை இறந்து விட்டார். சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாணவர் காங்கிரசில் இணைந்த விஜயதாரணி, 25 வயது வரை இளைஞர் காங்கிரசில் தீவிரமாகச் செயல்பட்டார். அதன் பிறகு காங்கிரசுக் கட்சியில் இணைந்து செயல்படத் துவங்கினார். கணிப்பொறியாளாரான இவரது கணவர் சிவகுமார் கென்னடி என்பவர் மார்ச் 2016-இல் இறந்து விட்டார்.[7] விசயதரணிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
அரசியல் வாழ்க்கை
இந்திய தேசிய காங்கிரசு
இவர் தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் முன்னாள் தலைவர் இருந்தார்.[8] 2016 ஆண்டில் இவர் அகில இந்திய மகளிர் காங்கிரசின் பொதுச் செயலாளராக கர்நாடகாவில் நியமிக்கப்பட்டார்.[9] 2016 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் இவர் 2021 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக அதே விளவங்கோடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய தேசிய காங்கிரசு கட்சிப் பதவிகள்
- தலைவர், தமிழ்நாடு மகளிர் அணி, இந்திய தேசிய காங்கிரசு கட்சி, (6 ஆகஸ்டு – 22 சனவரி 2016)
- பொதுச் செயலாளர், அகில இந்திய மகளிர் காங்கிரசு (4 மார்ச் 2016 முதல் )[10]
- தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் சட்டமன்ற கொறடா.[11]. (24 பிப்ரவரி 2023 வரை)
பாஜக (2024-தற்போது)
தனது பதவி விலகல் கடிதத்தை காங்கிரசு கட்சி அலுவலகத்தில் பகிர்ந்து கொண்டார், பின்னர் 24 பிப்ரவரி 2024 அன்று தில்லியிலுள்ள பாஜக அலுவலகத்தில் லோ. முருகன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[12][13] "காங்கிரசு கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்களை தலைவர்களாக பார்க்கவும், ஏற்கவும் காங்கிரசுக்கு மனநிலை இல்லை. பெண்களுக்கான வாய்ப்புகள் காங்கிரசு கட்சியில் மறுக்கப்படுகின்றன. ஆனால் பாஜகவில் முத்தலாக், இசுலாமிய பெண்களுக்கான சொத்துரிமை என பாஜக பெண்களுக்கான பல முன்னேற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது, பாஜக ஆட்சியில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், காங்கிரசு காலத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர்." என்று பாஜகவில் இணைந்த பிறகு தில்லியில் கூறினார்.[14]
மேற்கோள்கள்
- ↑ "Congress MLA S Vijayadharani husband passes away". Deccan Chronicle (in English). 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2020-12-28.
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2016-12-05.
- ↑ member_list.pdf "List of MLAs from Tamil Nadu 2016" (PDF). Govt. of Tamil Nadu.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
- ↑ "பாஜக-வில் இணைந்தார் விஜயதரணி!". நியூஸ்7. https://news7tamil.live/vijayadharani-joined-bjp.html?utm=thiral. பார்த்த நாள்: 24 February 2024.
- ↑ "Lawyer with lineage has task cut out". நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். https://www.newindianexpress.com/elections/elections-2011/2011/mar/25/lawyer-with-lineage-has-task-cut-out-238530.html. பார்த்த நாள்: 5 May 2021.
- ↑ விசயதரணி எம்.எல்.ஏ. கணவர் மரணம் மாரடைப்பால் உயிர் பிரிந்தது
- ↑ "S Vijayadharani keeps Mahila Congress general secretary post". The New Indian Express. 8 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-12-28.
- ↑ "Election Commission India". eci.nic.in. Archived from the original on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
- ↑ "அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொது செயலாளர் ஆகிறார் விஜய தாரணி". விகடன். 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2024-03-09.
- ↑ காங்கிரஸ் சட்டமன்ற கொறடாவாக எம்.எல்.ஏ விசயதரணி தேர்வு
- ↑ "Vijayadharani, Tamil Nadu Congress MLA, joins BJP". 24 February 2024.
- ↑ DIN (2024-02-24). "பா.ஜ.க.வில் இணைந்தார் விஜயதரணி!". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-03-09.
- ↑ "தமிழ்நாடு: விஜயதரணி, தேர்தல் நேரத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தது ஏன்?". BBC News தமிழ். 2024-02-25. பார்க்கப்பட்ட நாள் 2024-03-09.