சி. மௌனகுரு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சி. மௌனகுரு
Munaguru.JPG
முழுப்பெயர் சின்னையா
மௌனகுரு
பிறப்பு 09-06-1943
பிறந்த இடம் மட்டக்களப்பு,
இலங்கை
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது பேராசிரியர்,
அரங்க ஆய்வாளர்,
ஈழத்து எழுத்தாளர்


சின்னையா மௌனகுரு (பிறப்பு: ஜூன் 9, 1943) இலங்கையின் மட்டக்களப்பைச் சார்ந்த பேராசிரியர், அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குபவர் என்பதோடு மிகச் சிறந்த நடிகராகவும் கூத்துக் கலைஞராகவும் பெயர் பெற்றவர்.

அரங்கக்கலையில் பங்களிப்பு

ஈழத்து அரங்கத்துறையில் முக்கியப் பங்களிப்பு செய்த நான்கைந்து பேர்களில் மௌனகுரு குறிப்பிடத்தக்கவர். அரங்க நடவடிக்கைகளில் அவர் பல துறைகளில் தடம் பதித்தவர். புகழ் பெற்ற ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய கூத்து நாடகங்களில் சிறப்பாக நடித்திருந்தார். இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் ஊறிப்போன சாதியத்தை எதிர்த்து அரங்கேறிய இரு முக்கிய நாடக நிகழ்வுகளென “கந்தன் கருணை”யும் “சங்காரத்தை”யும் டானியல் அவர்கள் குறிப்பிடுவார்கள். இவ்விரு நாடகங்களிலும் மௌனகுரு அவர்களின் பங்கு முக்கியமானது.

மௌனகுரு நாடக ஆசிரியர், அரங்கத் துறை அறிஞர் மட்டுமன்று அவர் ஒரு சிறுகதை எழுத்தாளருமாவார்.

கல்வித் துறையில்

அவரது இன்னொரு முக்கியப் பரிமாணம் கல்வித் துறை சார்ந்தது. இலங்கையில் முக்கியத் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் அவர் பணியாற்றிய பங்களிப்புகள் செய்தாரென்பதோடு கிழக்குப் பல்கலைக்கழக உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அவருக்குப் பிரதான பங்குண்டு.

பேராசிரியரின் அடுத்த பரிமாணம் தமிழ் ஆய்வு சார்ந்தது. தமிழ் இலக்கிய வரலாறு, சங்க காலம் தவிர விபுலாநந்தரின் கருத்துலகம் முதலான துறைகளில் அவரது பங்களிப்பு உண்டு. நீலாவணன், சுபத்திரன் முதலான ஈழக் கவிஞர்களைத் தொடர்ந்து பாரதிதாசனையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.

இவரது நூல்கள்

  • 20ம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் - 1984
  • சடங்கில் இருந்து  நாடகம் வரை - 1985
  • மௌனகுருவின்   மூன்று நாடகங்கள் - 1985
  • தப்பி வந்த தாடி ஆடு - 1987
  • பழையதும் புதியதும் நாடகம் அரங்கியல் - 1992
  • சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும் - 1992
  • சங்காரம் - ஆற்றுகையும் தாக்கமும் ( நாடகம்)  - 1993
  • ஈழத்து தமிழ் நாடக அரங்கு - 1993
  • கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் - நீலாவணன் - 1994
  • கலை இலக்கிய கட்டுரைகள் - 1997
  • சக்தி பிறக்குது - நாடகம் - 1997
  • பேராசிரியர் எதிர்வீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும்  - 1997
  • இராவணேசன் நாடகம் - 1998
  • மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள் - 1998
  • அரங்கு ஓர் அறிமுகம் - இணையாசிரியர் - 2000
  • வனவாசத்தின் பின் நாடகம் - 2002
  • மட்டக்களப்பு தமிழகத்தில் இந்துப்பண்பாடு - பதிப்பாசிரியர் - 2003
  • அரங்கியல் - 2003
  • ஈழத்து நாடக அரங்கு - 2ம் திருத்திய பதிப்பு - 2004
  • தமிழ்க் கூத்துக்கலை – வடமோடி ஆட்டப்பயிற்சிக்கான கைந்நூல் - 2010
  • கூத்த யாத்திரை -  2021
  • கூத்தே உன் பன்மை அழகு -  2021

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சி._மௌனகுரு&oldid=2606" இருந்து மீள்விக்கப்பட்டது