சி. மோகன் (எழுத்தாளர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சி. மோகன் (எழுத்தாளர்)
சி. மோகன் (எழுத்தாளர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
சி. மோகன்

சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.[1] அதிக முனைப்பின்றிச் செயல்படுவர் என்பதால் குறைவாகவே எழுதியிருக்கிறார். ஆனால் விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார்.[2]

விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’[3] [4] என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி[5] என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற சி மோகனின் மொழியாக்கப் படைப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும்.[6]

சி.மோகனின் படைப்புகள்

  1. விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் (நாவல்)
  2. கமலி (நாவல்)
  3. மஞ்சள் மோகினி (சிறுகதைத் தொகுப்பு)
  4. நவீன உலகச் சிறுகதைகள் (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
  5. அங்கீகரிக்கப்படாத கனவின் வலி (நேர்காணல்கள்)
  6. எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை (கவிதைகள்)
  7. காலம் கலை கலைஞன் (கட்டுரைகள்)
  8. நடைவழிக்குறிப்புகள் (கட்டுரைகள்)
  9. நடைவழி நினைவுகள் (கட்டுரைகள்)
  10. ஜி.நாகராஜன் வாழ்வும் எழுத்தும் (கட்டுரைகள்)
  11. சுந்தரராமசாமி சில நினைவுகள் (கட்டுரைகள்)
  12. சி.மோகன் கட்டுரைகள் (கட்டுரைகள்)
  13. ஓநாய் குலச்சின்னம் (மொழிபெயர்ப்பு நாவல்)

மேற்கோள்கள்

  1. "சி. மோகனுக்கு விளக்கு விருது". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2015/sep/21/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-1189201.html. பார்த்த நாள்: 12 June 2021. 
  2. புத்தகங்கள், சிபாரிசுகள் « கூட்டாஞ்சோறு 16 பிப்ரவரி 2009 at 7முப (2009-02-11). "My Favorite Top 10 Tamil Fiction: C Mohan". 10 Hot. பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. "விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.
  4. "விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் /சி. மோகன். Vintaik kalaiñan̲in̲ uruvac cittiram /Ci. Mōkan̲. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.
  5. "இதற்குத்தானா கமலி ஆசைப்பட்டாள்?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.
  6. "சி.மோகனுக்கு விளக்கு விருது". www.jeyamohan.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.
"https://tamilar.wiki/index.php?title=சி._மோகன்_(எழுத்தாளர்)&oldid=4140" இருந்து மீள்விக்கப்பட்டது