சி. மா. இரவிச்சந்திரன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சி. மா. இரவிச்சந்திரன் (பிறப்பு: செப்டம்பர் 13, 1954) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றவர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 1987- இல் விரிவுரயாளராகத் தொடங்கி 2006- இல் துறைத்தலைவராகப் பொறுப்பேற்று 2013- இல் பணி ஓய்வுப் பெற்றார்.இவர் தமிழ்த் துறைக்கு கொங்கு நாட்டுப்புற வழக்காறுகள் - அளவாய்வு (Multifaceted Folklore Survey of Kongu Nadu) என்னும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சிறப்பு நிலை ஆய்வுத்திட்டத்தை ( SAP-D.R.S.-1) ரூ.22.50 இலட்சம் 2007- ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர். நாட்டுப்புறவியல் துறையில் தனி முத்திரைப் பதித்தவர். மேற்கு ஜெர்மனியில் நிகழ்ந்த பன்னாட்டு நாட்டுப்புறவியல் கருத்தரங்கில் பங்கேற்றவர். பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர். மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் புத்தாக்கப் பயிற்சிகளிலும் பங்கேற்று அவற்றின் ஒருங்கிணைப்பாளராகவும் பங்களிப்பு செய்துள்ளார். இவர் எழுதிய "தமிழரின் பெருமரபும் சிறுமரபும்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.