சி. தண்டாயுதபாணி
சி. தண்டாயுதபாணி S. Thandayuthapani மாகாணசபை உறுப்பினர் | |
---|---|
இலங்கை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 3 மார்ச் 2015 | |
எதிர்க்கட்சித் தலைவர், கிழக்கு மாகாண சபை | |
பதவியில் 28 செப்டம்பர் 2012 – 3 மார்ச் 2015 | |
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் (திருகோணமலை) | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2012 | |
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு ஆகத்து 2014 | |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
தொழில் | ஆசிரியர் |
சமயம் | சைவ சமயம் |
இனம் | இலங்கைத் தமிழர் |
சிங்காரவேலு தண்டாயுதபாணி (Singaravelu Thandayuthapani, பிறப்பு: 7 ஆகத்து 1950) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியரும் ஆவார். இவர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சராகப் பதவியில் உள்ளார்.
வாழ்க்கைச் சுருக்கம்
தண்டாயுதபாணி திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் கல்வி கற்றவர்.[1] பொருளியலில் பட்டம் பெற்ற பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சி பெற்றார்.[1]
பணி
தண்டாயுதபாணி பாடசாலை அதிபராகவிருந்து பின்னர் கல்வித்துறைப் பணிப்பாளரானார்.[1][2] கிழக்கு மாகாணத்துக்கான காணி, காணி அபிவிருத்தி, கல்வி, கலாசார அமைச்சின் செயலாளராக 2010 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[1]
அரசியலில்
2012 இல் இடம்பெற்ற மாகாணசபைக்கான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாணசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2012 செப்டம்பர் 28 இல் இவரை மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது.[1][4] தண்டாயுதபாணியும் அவருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய 10 கூட்டமைப்பு உறுப்பினர்களும் 2012 செப்டம்பர் 28 இல் கூட்டமைப்புத் தலைவரும் நாடாளுமன்ற உறுபினருமான இரா. சம்பந்தன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.[1]
சி. தண்டாயுதபாணி 2014 ஆகத்து 28 அன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
2015 அரசுத்தலைவர் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் அனைத்துக் கட்சி தேசிய மாகாண அரசு உருவாக்கப்பட்டது.[6][7][8] தண்டாயுதபாணி கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சராக ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ முன்னிலையில் 2015 மார்ச் 3 அன்று பதவியேற்றார்.[9][10]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Eastern Province Chief Minister assumes duties". சண்டே டைம்சு. 30 செப்டம்பர் 2012. http://www.sundaytimes.lk/120930/news/eastern-province-chief-minister-assumes-duties-14666.html.
- ↑ Gurunathan (15 நவம்பர் 2009). 24.html "US Ambassador declares open schools rebuilt by USAID". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/091115/News/nws 24.html.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2012/Candidates/Trinco FREV.pdf "Preferences". Department of Elections, Sri Lanka. http://www.slelections.gov.lk/pdf/ele 2012/Candidates/Trinco FREV.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Satyapalan, Franklin R. (30 செப்டம்பர் 2012). cat=article-details&page=article-details&code title=62691 "Inaugural session of Eastern PC tomorrow". ஐலண்டு. http://www.island.lk/index.php?page cat=article-details&page=article-details&code title=62691.
- ↑ வீரகேசரி, ஆகத்து 29, 2014
- ↑ Somarathna, Rasika (5 மார்ச் 2015). "'EPC power sharing similar to experimental unity govt'". டெய்லி நியூஸ் இம் மூலத்தில் இருந்து 2015-04-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402123328/http://www.dailynews.lk/?q=local%2Fepc-power-sharing-similar-experimental-unity-govt.
- ↑ Balachandran, P. K. (17 பெப்ரவரி 2015). "For The First Time in History, TNA Will Be in Eastern Province’ Board of Ministers". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/For-The-First-Time-in-History-TNA-Will-Be-in-Eastern-Province%E2%80%99-Board-of-Ministers/2015/02/17/article2673341.ece.
- ↑ Thambiah, Mirudhula (24 பெப்ரவரி 2015). "SLMC - TNA marriage in the East". சிலோன் டுடே இம் மூலத்தில் இருந்து 2015-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150227103624/http://www.ceylontoday.lk/89-85616-news-detail-slmc-tna-marriage-in-the-east.html.
- ↑ Panchalingam, Ariram (3 மார்ச் 2015). "New Eastern Provincial Council Ministers sworn in". நியூஸ் பெர்ஸ்ட் இம் மூலத்தில் இருந்து 2017-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170613230617/http://newsfirst.lk/english/2015/03/just-in-new-eastern-provincial-ministers-sworn-in/81189.
- ↑ "Eastern PC Ministers sworn in". Hiru News. 3 மார்ச் 2015. http://www.hirunews.lk/104692/eastern-pc-ministers-sworn-in.