சி. கதிரவேலுப்பிள்ளை
சி. கதிரவேலுப்பிள்ளை | |
---|---|
கோப்பாய் தொகுதியின் | |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1965–1981 | |
முன்னவர் | |
எம். பாலசுந்தரம், இதஅக | |
பின்வந்தவர் | |
எம். ஆலாலசுந்தரம், தவிகூ | |
முழுப்பெயர் | சிவசுப்பிரமணியம் |
கதிரவேலுப்பிள்ளை | |
பிறப்பு | 24-10-1924 |
மறைவு | 31-04-1981 |
சென்னை, | |
இந்தியா | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | அரசியல்வாதி |
அரசியல் கட்சி | இலங்கை தமிழரசுக் |
கட்சி | |
தொழில் | வழக்கறிஞர் |
சிவசுப்பிரமணியம் கதிரவேலுப்பிள்ளை (Sivasubramaniam Kathiravelupillai, 24 அக்டோபர் 1924 - 31 மார்ச் 1981) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
1924 அக்டோபர் 24 இல் பிறந்த கதிரவேலுப்பிள்ளை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் பட்டம் பெற்றவர். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.
அரசியலில்
இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்த கதிரவேலுப்பிள்ளை மார்ச் 1960, மற்றும் சூலை 1960 தேர்தல்களில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் 1965 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் கோப்பாய் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அதே தொகுதியில் 1970 தேர்தலில் வெற்றி பெற்றார் 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் கோப்பாய் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1981 இல் இறக்கும் வரையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
எழுதி வெளியிட்ட நூல்கள்
- Glimpses of Western philosophy
- Omarkhayam songs (மொழிபெயர்ப்பு)
- coexistence, and not confrontation
- மேல்நாட்டுத் தரிசன வரலாற்றின் சுருக்கம்
மேற்கோள்கள்
- 1924 பிறப்புகள்
- 1981 இறப்புகள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்
- இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- யாழ்ப்பாணத்து நபர்கள்
- இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்
- ஈழத்து எழுத்தாளர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் வட மாகாண நபர்கள்