சி. ஆர். கண்ணன்
சி. ஆர். கண்ணன் (இறப்பு: ஜூலை 9, 2009, அகவை 79) முதுபெரும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். அபர்ணா நாயுடு என்ற புனைப்பெயரில் பல தொடர்கதைகள், மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் பிறந்தவர் கண்ணன். முறையாக நடனம் பயின்று, திரைப்படத் துறையின் மூலம் கலையுலக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தினமணிக் கதிரில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பத்திரிகையாளராக மாறியவர்.
பத்திரிகையாளர் சாவியால் அவருக்கு சூட்டப்பட்ட புனைபெயர் "அபர்ணா நாயுடு". இப்பெயரில் அவர் எழுதிய பல சிறுகதைகள் மற்றும் தொடர் கதைகள், தினமணி கதிர், கல்கி, சாவி, குங்குமம் மற்றும் பல முன்னணி இதழ்களில் வெளியாகியுள்ளன.
"சகுந்த்" என்கிற புனைபெயரில் ஓவியர் ஜெயராஜும், சி.ஆர். கண்ணனும் இணைந்து தினமணிக் கதிரில் வாராவாரம் தொடர்ந்து எழுதிய ஒரு பக்கக் கதைகள் எழுதினர். அவரது கதையான "பகடை பன்னிரண்டு" திரைப்படமாக கமலகாசன் உள்ளிட்ட முன்னணிக் கலைஞர்கள் நடிப்பில் வெளி வந்தது.
இஅவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் "தற்கால ஜெர்மானிய சிறுகதைகள்" என்ற தொகுப்பாக வெளிவந்தன.
மறைவு
சிறிது காலம் உடல் நலமின்றி இருந்த கண்ணன், சென்னை பெசன்ட் நகரிலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை (9/7/09) காலை உயிரிழந்தார். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்[1].
மேற்கோள்கள்
- ↑ பத்திரிகையாளர் சி.ஆர். கண்ணன் காலமானார்[தொடர்பிழந்த இணைப்பு], தினமணி, சூலை 10, 2009