சிவாங்கி கிருஷ்ணகுமார்

சிவாங்கி கிருஷ்ணகுமார் (Sivaangi Krishnakumar, பிறப்பு 25 மே 2000) சிவாங்கி கிருஷ்ணகுமார் ஒரு பின்னணி பாடகி மற்றும் நகைச்சுவை நடிகை. 2019 சூப்பர் சிங்கர் 7 என்றழைக்கப்படும் தொலைக்காட்சி பாடல் போட்டியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. அவ்வருடத்தின் பிற்பகுதியில் குக்கு வித் கோமாளி எனும் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இவர் தற்போது டான் எனும் தமிழ் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து கொண்டிருக்கிறார். இத்திரைப்படம் சிவகார்த்திகேயனுடன் சிவாங்கி இணைந்து நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாகும்.[1]

சிவாங்கி கிருஷ்ணகுமார்
Sivaangi krishnakumar.jpg
சிவாங்கி 2021 இல்
பிறப்புதொடுபுழா, கேரளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்எம். ஓ. பி. வைணவ மகளிர் கல்லூரி
பணி
  • பின்னணி பாடகி
  • நடிகை
  • தொலைக்காட்சி பிரபலம்
செயற்பாட்டுக்
காலம்
2009
2019–தற்போது வரை

தொடக்க கால வாழ்க்கை

சிவாங்கி கேரளாவிலுள்ள தொடுபுழா என்னும் ஊரில் 2000ஆம் ஆண்டில் மே மாதம் 25ஆம் நாள் பிறந்தார். இவரின் தாய் மொழி மலையாளம் ஆகும். இவர் தந்தை கிருஷ்ணகுமார் ஒரு தொழிலதிபரும், இசைக் கலைஞருமாவார். இவரது தாய் பின்னி கிருஷ்ணகுமார் பின்னணிப் பாடகியாவாவார். சிவாங்கியின் பெற்றோர் இருவரும் கலைமாமணி விருது பெற்றுள்ளார்கள்.[2][3] இவரது சகோதரர் பெயர் வினயக் சுந்தர். சிவாங்கி பிறந்த பின் இவரது பெற்றோர்கள் இவரை தமிழ்நாட்டிலுள்ள சென்னைக்கு அழைத்து வந்தனர். இவர் சின்மயா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின் எம். ஓ. பி வைணவ மகளிர் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். இவரது கல்லூரி நாட்களில் இசைத் துறையில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவர் தனது கல்லுாரி நாட்களிலேயே இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தினார்.[4]

தொழில் வாழ்க்கை

சிவாங்கி, தனது முதல் திரைப்படப் பாடலாக “பசங்க” என்னும் தமிழ் திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்த “அன்பாலே அழகாகும்” என்னும் பாடலை பாடினார்.[5] இத்திரைப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளது. 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு சூப்பர் சிங்கர்7 என்னும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் ஆறு இடங்களுல் இடம் பெற்றார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் "குக்கு வித் கோமாளி" என்னும் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.[6][7] இதில் கலந்து கொண்ட பின் 2021ஆம் ஆண்டு பிளாக் ஷீப் டிஜிட்டல் விருது நிகழ்ச்சியில் சிறந்த பெண் பொழுதுபோக்கு நட்சத்திரத்திற்கான விருது, பிஹைண்ட் வுட்ஸ் கோல்டு ஐகான் நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பெண் நட்சத்திரத்திற்கான விருது மற்றும் விஜய் தொலைக்காட்சி விருதுகள் நிகழ்ச்சியில் அஸ்வின்குமார் லட்சுமி நாதன் என்பவருடன் தொலைக்காட்சியில் பிரபலமான ஜோடிக்கான விருது ஆகிய மூன்று விருதுகளை இதுவரை பெற்றுள்ளார்.[8]

குக்கு வித் கோமாளியில் கலந்து கொண்ட பிறகு சிவகார்த்திகேயன் தான் நடிக்கவிருக்கும் "டான்" எனும் தமிழ் திரைப்படத்தில் சிவாங்கியையும் நடிக்க வைப்பதாக கூறினார்.[9] அதுமட்டுமன்றி அதே படத்தில் சிவாங்கி ஒரு பாடலையும் பாட உள்ளார். 2021ஆம் ஆண்டு சிவாங்கி, தரண்குமாருடன் இணைந்து “அஸ்கு மாரோ” என்ற பாடலை பாடினார்.[10] அப்பாட்டு மிக பிரபலம் அடைந்த பின் அதை இவர் தெலுங்கிலும் பாடினார். பின்னர் சாம்விசாலுடன் இணைந்து "முருங்கக்காய் சிப்ஸ்" எனும் திரைப்படத்தில் "டாக் லெஸ் ஒர்க் மோர்" எனும் பாடலும் பாடியுள்ளார். இப்பாடலும் மிகவும் பிரபலமடைந்துள்ளது.[10]

2021 இல் ஓணம் சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்ட 'அடிபொலி' என்ற பாடலை வினீத் சீனிவாசனுடன் இணைந்து பாடினார்.[11]

மேற்கோள்கள்

  1. "Sivakarthikeyan keeps up his promise by roping in Shivangi for 'Don' - Times of India ►". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  2. "Sivaangi: கலைமாமணி விருதால் சிவாங்கி வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம்!". News18 Tamil (in tm). பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Sathyendran, Nita (2012-10-05). "And Quiet Flows The Karamana: Two of a kind". The Hindu (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  4. "'Cooku With Comali' Shivaangi was a premature baby - Exclusive video interview". indiaglitz. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
  5. "Watch: Sivaangi and Vineeth's Tamil track 'Adipoli' recreates Onam celebrations". www.thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 22 August 2021.
  6. "From Ashwin Kumar's confession of missing Sivaangi Krish to the latter singing a song for him, a look at their most special moments". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in English). 18 April 2021.
  7. Sunder, Gautam (11 February 2021). "Cooku with Comali's Pugazh and Sivaangi: On the show's popularity and their friendship". தி இந்து (in English).
  8. Anumaggie (9 March 2021). ""Ashwineyy, This Is So Special" - Sivaangi's Latest Revelation Is Turning Heads!". Behindwoods (in English).
  9. "Sivakarthikeyan keeps up his promise by roping in Shivangi for 'Don'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in English). 11 February 2021.
  10. 10.0 10.1 "Watch Latest Tamil Music Video Song 'Asku Maaro' Sung by Dharan Kumar and K. Sivaangi Starring Kavin and Teju Ashwini | Tamil Video Songs - Times of India". timesofindia.indiatimes.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
  11. "Adipoli Song: Ashwin Sivaangi's Adipoli Tamil Onam Song Hits The Trend". www.newsbricks.com. 21 August 2021. பார்க்கப்பட்ட நாள் 22 August 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/index.php?title=சிவாங்கி_கிருஷ்ணகுமார்&oldid=23618" இருந்து மீள்விக்கப்பட்டது