சாம் விசால்
சாம் விசால் | |
---|---|
சாம் விசால், 2019 | |
பிறப்பு | சாம் விசால் சேவியர் 28 செப்டம்பர் 1999 தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
கல்வி | இலயோலாக் கல்லூரி, சென்னை |
பணி | பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 2019-தற்போது வரை |
உயரம் | 5'11 |
சாம் விசால் (Sam Vishal J.X.) (பிறப்பு: செப்டம்பர் 28, 1999) ஓர் இந்தியப் பின்னணி பாடகர் ஆவார். இவர் 2019ஆம் ஆண்டில், புன்யா செல்வாவுடன் இணைந்து சூப்பர் சிங்கர் 7 மெய் நிகழ்ச்சியில் 3வது இடத்தைப் பிடித்தார்.[1] இந்த நிகழ்ச்சியில் 3வது இடத்தைப் பிடித்ததற்காக, இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் - 'சிட்டி ஸ்டோரி' மற்றும் 'புட்டா ஸ்டோரி' ('குட்டி ஸ்டோரி' இன் தெலுங்கு மற்றும் கன்னட பதிப்புகள்) பாடல்களைப் பாடுவதற்கான வாய்ப்பை இவருக்கு அளித்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
சாம் விசால் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் சேவியர் சகாயராஜ் மற்றும் சோபியா சேவியர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு சிஃப்ரா சேவியர் என்ற தங்கையும் உள்ளார். இவர் எங்கும் இசை கற்கவில்லை, எந்த இசைப் பின்னணியும் இல்லாத ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர். சென்னை, இலயோலாக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். தனது கல்லூரி நாட்களில், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு இசைக்குழுவைத் தொடங்கி, பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.