சிவதீக்கை
Jump to navigation
Jump to search
சைவ நெறியில் திருமுறைகளையும் சிவாகமங்களையும் ஓதுவதற்கும், சைவ ஒழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகுவதற்கும் உரிய தகுதியை உண்டு பண்ணுவது சிவதீக்கை எனப்படும்.
வகைகள்
சிவதீக்கை நிராதர தீக்கை, சாதார தீக்கை என இரு வகைப்படும்.
நிராதர தீக்கை
வேறோர் ஆதாரத்தைக் கொள்ளாது சிவபெருமான் தானே நேர் நின்று செய்வது நிராதர தீக்கை எனப்படும்.
சாதார தீக்கை
வேறொரு பொருளைத் தனக்கு ஆதாரமாகக் கொண்டு இறைவன் செய்யும் தீக்கை சாதார தீக்கை எனப்படும்.
காண்க
ஆதாரம்
- டாக்டர் கோமதி சூரியமூர்த்தி எழுதிய “சைவசமய சாத்திரக் கட்டுரைகள் (தொகுதி3)” நூல் பக்கம் 179