சிவகுமாரின் சபதம்
சிவகுமாரின் சபதம் | |
---|---|
இயக்கம் | ஹிப்ஹாப் தமிழா |
தயாரிப்பு | ஹிப்ஹாப் தமிழா செந்தில் தியாகராஜன் அர்ஜுன் தியாகராஜன் |
Dialogue by | Hiphop Tamizha and Bala Singaravelan |
திரைக்கதை |
|
இசை | ஹிப்ஹாப் தமிழா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | அர்ஜுன்ராஜா |
படத்தொகுப்பு | தீபக் எஸ். துவாரகநாத் |
கலையகம் |
|
வெளியீடு | செப்டம்பர் 30, 2021 |
ஓட்டம் | 138 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிவகுமாரின் சபதம் ( Sivakumarin Sabadham ) என்பது 2021ஆம் ஆண்டு தமிழில் வெளியான நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். ஹிப்ஹாப் தமிழா என்கிற ஆதி எழுதி இயக்கியிருந்த இந்தப் படத்தில் அவர் நாயகனாக நடித்திருந்தார். இது இயக்குனராக அவரது இரண்டாவது படமாகும். மேலும், இண்டி ரெபல்ஸ் பதாகையில் சத்ய ஜோதி பிலிம்ஸுடன் இணைந்து தயாரித்தார். நடிகை மாதுரி ஜெயினுக்கு இணையாக ஆதி நடித்துள்ளார்.[1] படம் 30 செப்டம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்களை எதிர் கொண்டது.[2]
நடிகர்கள்
- சிவகுமார் என்கிற சிவாவாகஹிப்ஹாப் தமிழா
- சுருதியாக மாதுரி ஜெயின்
- சிவகுமாரின் தாத்தா வரதராஜனாக இளங்கோ குமணன்
- கதிராக ஆதித்யா கதிர்
- முருகனாக கோமாளி ராகுல்
- முருகனின் மனைவியாக விஜே பார்வதி
- சிவகுமாரின் அம்மாவாக தேவி அபிநயா
- மனோஜ் வேடத்தில் ராகுல் ராஜ்
தயாரிப்பு
முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி அக்டோபர் 2020 இல் தொடங்கியது. மேலும் அந்த ஆண்டு திசம்பருக்குள் படம் முடிக்கப்பட்டது.[3]
வரவேற்பு
பிலிம் கம்பேனியனின் விஷால் மேனன் "படத்தின் கதைக்கரு நாம் இதற்கு முன்பு பலமுறை பார்த்ததுதான். ஆனால் பொதுவாக ஒருவர் உட்கார்ந்து பார்க்கூடிய எளிமை உள்ளது" எழுதினார்.[4]
ஒலிப்பதிவு
படத்தின் ஒலிப்பதிவை ஹிப்ஹாப் தமிழா மேற்கொண்டுள்ளார். பாடல் வரிகளை ஹிப்ஹாப் தமிழா, ரோகேஷ் மற்றும் கோ சேஷா எழுதியுள்ளனர்.
சான்றுகள்
- ↑ "Hiphop Tamizha's next directorial titled Sivakumarin Sabadham; First look is here". 10 February 2021. https://www.cinemaexpress.com/stories/news/2021/feb/10/hiphop-tamizhas-next-directorialtitled-sivakumarin-sabhamfirst-look-is-here-22761.html.
- ↑ "Hiphop Adhi’s Sivakumarin Sabadham to release on September 30". 17 September 2021. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/hiphop-adhis-sivakumarin-sabadham-to-release-on-september-30/articleshow/86289863.cms.
- ↑ "Hiphop Adhi’s next is titled Sivakumarin Sabadham". 10 February 2021. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/hiphop-adhis-next-is-titled-sivakumarin-sabadham/articleshow/80788312.cms.
- ↑ Menon, Vishal. "Sivakumarin Sabadham Review: Hiphop Tamizha Weaves A Generic Tale Around The Kancheepuram Silk, Middle Class Values And The Thaatha Sentiment" September 30, 2021 அன்று. பரணிடப்பட்டது.. வார்ப்புரு:Citation error. https://www.filmcompanion.in/reviews/tamil-review/sivakumarin-sabadham-movie-review-hiphop-tamizha-aadhi-weaves-a-generic-tale-kancheepuram-silk-middle-class-values/?utm_source=Wikipedia&utm_medium=ContentSeeding&utm_campaign=SivakumarinSabadhamReview.