சிற்றில் விளையாட்டு
Jump to navigation
Jump to search
சிறுவர் சிறுமியர் மணல்வீடு கட்டி விளையாடும் பொழுதுபோக்குத் திளைப்பு ஆட்டத்தைச் சிற்றில் விளையாட்டு என்பர். தாய்தந்தையர் வீட்டில் வாழும் பாங்கை விளையாட்டாக நடித்துக்கொண்டு சிறுவர் சிறுமியர் சிற்றில் ஆடுவர். விக்கிப்பீடியா:மணல்தொட்டியில் எழுதிப் பழகுவது போல, வாழ்வியல் பாங்குகளை விளையாடிப் பழகும் விளையாட்டு இது.
சமைத்தல், உணவு படைத்தல், குழந்தை வளர்த்தல், வயலுக்குச் சென்றுவருதல் முதலான பணிகளைச் செய்வது போல நடிப்பர். தெருமண்ணில் கட்டிய கரை அவர்களுக்கு வீடு. இதுதான் சிற்றில். சிறுவர் சிறுமியர் கட்டிய சிற்றிலைச் சிதைப்பதும் ஒரு விளையாட்டு. ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் சிற்றில் சிதையேலே எனச் சிறுமியர் கெஞ்சுவது போல இந்தச் சிற்றில் பருவ விளையாட்டு வரும்.
சங்ககாலத்தில் இது விளையாடப்பட்ட பாங்கைப் பல பாடல்கள் தெருவிக்கின்றன.
சிற்றில் செய்திகள்
அடிக்குறிப்பு
- ↑
சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,
நோ தக்க செய்யும் சிறு, பட்டி, (கலித்தொகை 51) - ↑
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ,
வரி புனை சிற்றில் (நற்றிணை 123) - ↑
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில், (அகம் 167) - ↑
இடு முள் வேலி முடக் கால் பந்தர்,
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில், (அகம் 394) - ↑
சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன்
யாண்டு உளனோ?' என வினவுதி (புறம் 86)