சிற்பி ஜெயராமன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சிற்பி ஜெயராமன் |
---|---|
அறியப்படுவது | ஓவியர், சிற்பி, கவிஞர், எழுத்தாளர் |
சிற்பி ஜெயராமன், ஓவியர், சிற்பி, கவிஞர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட தமிழக கலைஞர் ஆவார். இவர் புகழ் பெற்ற சிற்பியான வித்யா சங்கர் ஸ்தபதியின் மாணவர். இவரை சர்வதேச அளவில் சிறந்த சிற்பியாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.இவர் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட ஓவிய கண்காட்சிகளை புதுச்சேரி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புதுதில்லி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களில் நடத்தியுள்ளார். [1]
வாழ்க்கை வரலாறு
இவர் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள புளியம்பட்டு கிராமத்தில் பிறந்தார். கும்பகோணம் ஓவியக் கல்லுாரியில் இளங்கலை சிற்ப படிப்பை முடித்தார். சென்னை ஓவியக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் சிற்பம் படித்தார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 1981-1988 வரை ஓவியராக பணி செய்தார். அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள, பாரதியார் பல்கலைக் கூடத்தில் முதல்வராக 1998 முதல் 2015 வரை பணிசெய்துள்ளார். தஞ்சை தென்னக பண்பாட்டு மைய உதவி இயக்குனராக, 2004-05 என இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். கலை சம்பந்தமாக 15 நுால்களையும் எழுதியுள்ளார்.
சிற்பி ஜெயராமன், சவுந்தரநாயகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சார்கோல் என்ற மகளும், மவுனி என்ற மகனும் உள்ளனர். இவர்கள் புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் உள்ள அரவிந்தர் நகரில் வசித்து வருகின்றனர்.
இறப்பு
சிற்பி ஜெயராமன் அக்டோபர் 12, 2018 அன்று நெஞ்சுவலி காரணமாக மருத்துமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 65 ஆகும். [2]