சிறுபாடு விளையாட்டுகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஓடியும், ஆடியும், பாடியும் விளையாடும் ஆட்டங்களை விளையாட்டு என்றும், ஓடியாடாமல் உட்கார்ந்துகொண்டு விளையாடும் ஆட்டங்களைச் சிறுபாடு [1] என்றும் தமிழர் பாகுபடுத்திக் கொண்டிருந்தனர். [2] [3] அவர்கள் கருத்துப்படி வங்கம் போலக் கோடு வரையப்பட்ட ஆடுபுலி ஆட்ட விளையாட்டு சிறுபாடு விளையாட்டு. அரங்கில் வட்டுநா விளையாட்டு விளையாட்டு. சிறுபாடு விளையாட்டில் சலிப்பு தோன்றியபோது ஓடியாடும் விளையாட்டில் ஈடுபடுவார்களாம்.

அடிக்குறிப்பு

  1. பாடுபடுதல் சிறிதாக உள்ள விளையாட்டு
  2. வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,
    செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
    விளையாடு இன் நகை (நற்றிணை 341)
  3. "வங்கா வரிப்பாறை" என்னும் பாடல் பகுதிக்கு "வங்க வரிப்பாறை" என்னும் பாட பேதமும் உண்டு
"https://tamilar.wiki/index.php?title=சிறுபாடு_விளையாட்டுகள்&oldid=13211" இருந்து மீள்விக்கப்பட்டது