சிறுகுரீஇ உரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சிறுகுரீஇ உரை என்னும் நூல் மறைந்துபோன தமிழ் நூல்களில் ஒன்று. இதனைப் பேராசிரியர் தம் தொல்காப்பிய உரையில் [1] குறிப்பிடுகிறார. இது பொய் அல்லாத உண்மை நிகழ்வுகளுக்கு நகைச்சுவை கூட்டி எழுதப்பட்ட நூல் என அவர் குறிப்பிடுகிறார். [2] இத்தகைய நூல்களைத் தொல்காப்பியம் 'பொருளொடு புணர்ந்த நகைமொழி' எனக் குறிப்பிடுகிறது. [3] இது போல் அமைந்த மற்றொரு நூல் தந்திர வாக்கியம்.

அடிக்குறிப்பு

  1. பேராசிரியர் (நூல் பதிப்பு 1959). தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியல் பேராசிரியர் உரை. சென்னை 1: சைவ சித்தாந்த நூறுபதிப்புக் கழகம். p. 389. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: location (link)
  2. "பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்பது - பொய் எனப்படாது மெய் எனப்படும் நகுதற்கு ஏதுவாகும் தொடர்நிலை. அதுவும் உரை எனப்படும். அவையாவன சிறுகுரீஇயுரையும் தந்திரவாக்கியமும் போல்வன எனக் கொள்க. இவற்றுள் சொல்லப்படும் பொருள் பொய் எனப்படாது. உலகியலாகிய கதைத் தோற்றம் என்பது".
  3. பாட்டிடை வைத்த குறிப்பி னானும்
    பா இன்று எழுந்த கிளவி யானும்
    பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும்
    பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் என்று
    உரைவகை நடையே நான்றஃகு என மொழிப (தொல்காப்பியம் 3-485)
"https://tamilar.wiki/index.php?title=சிறுகுரீஇ_உரை&oldid=15647" இருந்து மீள்விக்கப்பட்டது