சிறீ. சாரதாக்குட்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிறீ. சாரதாக்குட்டி
S Saradakkutty.jpg
இயற்பெயர் சிறீ. சாரதாக்குட்டி
பிறப்புபெயர் சிறீ. சாரதாக்குட்டி
பிறந்தஇடம் கோட்டயம், கேரளம், இந்தியா
பணி இலக்கியம் & சமூக திறனாய்வு
குறிப்பிடத்தக்க விருதுகள் இலக்கியத் திறனாய்விற்கான கேரள சாகித்ய அகாடமி விருது

சிறீ. சாரதாக்குட்டி (S. Saradakkutty) மலையாள மொழியின் இந்திய இலக்கிய மற்றும் சமூக விமர்சகர் ஆவார்.[1] இவர் இலக்கிய விமர்சனத்திற்கான 2022 கேரள சாகித்திய அகாதமி விருதைப் பெற்றவர்.[2]

வாழ்க்கை

சாரதாக்குட்டி, கேரளாவின் கோட்டயத்தில் டி. எசு. சிறீதரன் நாயர் மற்றும் ஜே. பாரதியம்மாவின் மகளாகப் பிறந்தார். கவிதையில் புத்த தரிசனம் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[3] இவரது முக்கியப் படைப்புகளில் நான் நீங்கல்கேதிரே ஆகாசதேயும் பூமியும் சாக்ஷ்யம் வெகுன்னு, பிரணயாதடவுகாரன், எத்ரயேத்ரா பிரேரணங்கள், பெண்வினிமயங்கள் மற்றும் பெண் கொத்திய வாக்குகள் ஆகியவை அடங்கும். சாரதாக்குட்டி 2023-இல் எத்ரயேத்ர பிரேரணகல் என்ற படைப்புக்காக இலக்கிய விமர்சனத்திற்கான கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றார்.[4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சிறீ._சாரதாக்குட்டி&oldid=19204" இருந்து மீள்விக்கப்பட்டது