சிறீனிவாச ஆச்சார்யா
பண்டிதர் சிறீனிவாச ஆச்சார்யா Shrinivas Acharya | |
---|---|
பண்டிதர் சிறீனிவாச ஆச்சார்யா ஆர்மோனியம் வாசிக்கிறார். | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 15 ஏப்ரல் 1967 |
பிறப்பிடம் | இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துசுதானி இசை |
தொழில்(கள்) | இசைக்கலைஞர், பாரம்பரிய இசைக் கலைஞர் |
பண்டித சிறீனிவாச ஆச்சார்யா (Pandit Shrinivas Acharya) ஓர் ஆர்மோனிய இசை மேதையாவார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் பயிற்சி
கோபிநாத் ஆச்சார்யா [1] மற்றும் சைலசிறீ ஆச்சார்யா ஆகியோருக்கு 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி சிறீனிவாசு பிறந்தார். சிறீனிவாசு தனது ஆரம்பப் பயிற்சியை தனது தாயார் சைலசிறீ ஆச்சார்யாவிடம் இருந்து கற்கத் தொடங்கினார். பின்னர் பண்டிதர் விசுவநாத் பெந்தார்க்கரிடம் இசைப் பயிற்சியில் இருந்தார், இங்குதான் சிறீனிவாசு தனி ஆர்மோனியப் பாடங்களை கற்றுக்கொண்டார். பின்னர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இவர் பண்டிதர் புருசோத்தம் வாவல்கரின் சீடராக இருந்தார். [2] நாளடைவில் சிறீனிவாசு தனது இரு குருக்களின் இசைப்பாணிகளையும் ஒருங்கிணைத்தார்.
இந்துசுதானிய பாரம்பரிய இசை (குறிப்பாக ராக இசை) பற்றிய அறிவும் திறமையும் மட்டும் இல்லாமல், ஆர்மோனியத்தில் இசைக்கும் தும்ரி எனப்படும் குரலிசை பாணியிலும் இவருக்கு நல்ல இசைஞானம் இருக்கிறது.
தொழில்
பண்டிதர் சிஆர் வியாசு, பேகம் பர்வீன் சுல்தானா, விதுசி சோபா குர்து, உசுதாத் ரசீத் கான், பண்டிதர் பிரபாகர் கரேகர், பண்டிதர் அசய் போகங்கர், பண்டிதர் கைவல்ய குமார் குரவ், விதுசி கௌசிகி சக்ரவர்த்தி, தேவகி பண்டிதர், பண்டிதர் சுகா வியாசு, பண்டிதர் வித்யாதர் வியாசு , பண்டிதர் ஓம்கர் குல்வாடி, பண்டிதர் ரகுநந்தன் பன்சிகர், பண்டிதர் ராம் தேசுபாண்டே, உசுதாத் ராசாமியா கான், சவானி செண்டே. [2] ஆகியோருடன் இணைந்து சிறீனிவாசு இசைநிகச்சிகள் கொடுத்துள்ளார்.
பண்டிதர் முகுந்த்ராசு தியோ மற்றும் பண்டிதர் மகேசு கானோல் போன்ற தபேலா வித்வான்களுடனும் இவர் வாசித்துள்ளார். பெரும்பாலும் இவர் பேகம் பர்வீன் சுல்தானாவுடன் ஆர்மோனியம் வாசிக்க செல்கிறார். [3]
டாக்டர் திலீப் கைடோண்டே (தபேலா கலைஞர் பண்டிதர் பாய் கைடோண்டேவின் மகன்) சிறீனிவாந்ச ஆச்சார்யாவின் குரு பந்து ஆவார்.
அகில இந்திய வானொலியின் சிறப்புப் பரிசு உட்பட பல ஆர்மோனியப் போட்டிகளில் சிறீனிவாசு முதல் பரிசு பெற்றுள்ளார். குனிதாசு சங்கீத சம்மேளா, புனேவில் சவாய் கந்தர்வ மகோத்சவ், குவாலியரில் தான்சென் சமரோகா, ஐடிசி சங்கீத சம்மேளனம், அகில இந்திய வானொலி சங்கீத சம்மேளா போன்ற இந்தியாவின் முக்கிய பாரம்பரிய இசை நிகழ்வுகளில் இவர் பங்கேற்றுள்ளார். மொராக்கோவில் நடந்த உலக இசை விழா, துபாயில் துபாய் வணிகத் திருவிழா , இலண்டனில் நடந்த இந்திய இசை விழா மற்றும் உலகெங்கிலும் நடைபெற்ற பல பாரம்பரிய இசை விழாக்களிலும் இவர் பங்கேற்றார். [2]
பண்டிதர் சுகாசு வியாசு (குரல்) மற்றும் பண்டிதர் மகேசு கானோல் (தபேலா) ஆகியோருடன் இணைந்து 2017 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள சியாமெனில் நடந்த பிரிக்சு குரல் கச்சேரியில் சிறீனிவாசு ஆர்மோனியம் வாசித்தார். [4]
சித்தேசு தக்கர் மற்றும் சித்தார்த் கார்வே ஆகியோர் சிறீனிவாச ஆச்சார்யாவின் சீடர்களாவர்.
தனிப்பட்ட வாழ்க்கை
சங்கீதா ஆச்சார்யாவை சிறீனிவாச ஆச்சார்யா மணந்தார். பண்டிதர் ரமேசு கானோலின் மகளாகவும் ஓர் இந்துசுதானி பாரம்பரிய பாடகர் ஆகவும் சங்கீதா அறியப்படுகிறார். பண்டிதர் மகேசு கானோல் (பண்டிட் ரமேசு கானோலின் மகன் மற்றும் தபலா குரு பண்டிட் பாய் கைடோண்டேவின் மாணவர்) சிறீனிவாச ஆச்சார்யாவின் மைத்துனர் ஆவார்.