சிறீகாந்த் வர்மா
சிறீகாந்த் வர்மா | |
---|---|
பிறப்பு | பிலாசுப்பூர் (சத்தீசுகர்) | 18 செப்டம்பர் 1931
இறப்பு | 25 மே 1986 நியூயார்க் நகரம் | (அகவை 54)
தேசியம் | இந்தியர் |
பணி | கவிஞர் அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை | வீணா வர்மா |
பிள்ளைகள் | அபிசேக் வர்மா |
சிறீகாந்த் வர்மா (Shrikant Verma)(18 செப்டம்பர் 1931 - 25 மே 1986) என்பவர் இந்தியக் கவிஞர் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து 1976 முதல் 1982 வரையும், 1982 முதல் 1986 வரையும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். வர்மா புற்றுநோயால் 1986ஆம் ஆண்டு நியூயார்க்கில் இறந்தார்.[1]
குடும்பம்
வர்மா, மத்தியப் பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வீணா வர்மாவை மணந்தார்.[2][3][4][5] இந்த இணையரின் மகன் அபிஷேக் வர்மா ஆவார். இவர் ஓர் இந்திய ஆயுத வியாபாரி மற்றும் 1997-ல் இந்தியாவின் இளைய கோடீசுவரராக அறிவிக்கப்பட்டாவர் ஆவார்.[6]
கல்வி
வர்மா இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் நகரில் பிறந்தார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றார். இருபது நூல்களை எழுதியுள்ளார்.[7]
விருது
வர்மா 1976ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச அரசிடமிருந்து ஜல்சாகர் படத்திற்காகத் துளசி சம்மான் மற்றும் 1981ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநில கலா பரிசத்தில் இருந்து ஷிக்ஷா சம்மான் விருதுகளைப் பெற்றார். 1982ல், புது தில்லியில் நடைபெற்ற ஆப்ரோ-ஆசிய எழுத்தாளர் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.[8] 1987-ல், இவருக்கு மரணத்திற்குப் பின் மகத் திரைப்படத்திற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
இறப்பு
வர்மா புற்றுநோயால் 1986ஆம் ஆண்டு நியூயார்க்கில் இறந்தார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "The Great Performance: The awkward alliance of poetry and politics" (in en-US). The Indian Express. 2014-03-08. http://indianexpress.com/article/india/india-others/the-great-performance/.
- ↑ "Member of Rajya Sabha from 1952-2003". http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/v.pdf.
- ↑ "Photo Gallery" இம் மூலத்தில் இருந்து 2016-09-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160916030752/http://www.priyadarshniacademy.com/4-ann-national-awards/photo-gallery/4-national-awards1.html.
- ↑ "Verma, wife in CBI net for tweaking defence deals". http://defence.pk/threads/verma-wife-in-cbi-net-for-tweaking-defence-deals.186126/.
- ↑ "Team Anna alleges corruption in defence deals, names MP's son - Firstpost" (in en-US). 2012-04-26. http://www.firstpost.com/india/team-anna-alleges-corruption-in-defence-deals-names-mps-son-289920.html.
- ↑ "Rich across the world identify with the same brands for status". http://indiatoday.intoday.in/story/rich-across-the-world-identify-with-the-same-brands-for-status/1/276726.html.
- ↑ "Indian Poets I Bio-Notes on Hindi Poets I" இம் மூலத்தில் இருந்து 24 நவம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151124113825/http://www.lchr.org/a/4/65/hindi.html.
- ↑ Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot. https://books.google.com/books?id=KnPoYxrRfc0C&q=Madhya+Pradesh+Government%27s+Tulsi+Puraskar+SHrikant+verma&pg=PA4504. பார்த்த நாள்: 25 May 2016.