கன்னியாகுமரி (பேரூராட்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>Mohamed ijazz
(115.241.19.255 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1699955 இல்லாது செய்யப்பட்டது)
வரிசை 23: வரிசை 23:
==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.08|N|77.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kanniyakumari.html |title = Kanniyakumari |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0&nbsp;[[மீட்டர்]] (0&nbsp;[[அடி (நீள அலகு)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.08|N|77.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kanniyakumari.html |title = Kanniyakumari |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0&nbsp;[[மீட்டர்]] (0&nbsp;[[அடி (நீள அலகு)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
== பெயர் வரலாறு ==
சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது. குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.
== உள்ளாட்சி நிறுவனங்கள் ==
நகராட்சிகள்- 4, (நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை);
நகரியம்-1 (கன்னியாகுமரி);
ஊராட்சி ஒன்றியம் - 9; பேரூராட்சிகள் - 67; ஊராட்சி-88.
== சட்டசபை தொகுதிகள் ==
7 (கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர்.
== நாடாளுமன்ற தொகுதி ==
1 (நாகர்கோவில்).
== வழிபாட்டிடங்கள் ==
கன்னியாகுமரி- பகவதியம்மன்; சுசீந்திரம்- தாணுமாலையன் கோவில்; நாகர்கோவில்- நாகராஜா கோவில், முந்திரிதோப்பு- வைகுண்டசாமி அய்யா, திருவட்டார்- ஆதிகேசவப் பெருமாள்; கோட்டாறு- சவேரியார் கோவில். தக்கலை- ஞானி பீர்முகமது மசூதி.
=== பன்னிரெண்டு சிவாலயங்கள் ===
திருமலை, திக்குரிச்சி, திருப்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் என்ற 12 சிவாலயங்கள் இம்மாவட்டத்தில் உண்டு. சிவராத்திரி அன்று பக்தர்கள் இச்சிவாலயங்களை நோக்கி உச்சரித்துக் கொண்டே ஓடுவர். அதற்கு 'சிவாலயம் ஓடுவது' என்று பெயர். கடைசியாக தாணுமாலயனை வணங்குவது வழக்கம்.
== மாவட்டத்தில் குறிப்பிடத்தக்கோர் ==
தொல்காப்பியர், அதங்கோட்டாசான், திருவள்ளுவர் போன்ற பழங்கால தமிழ் அறிஞர்களும், இக்காலத்தில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, நூறு அவதானங்களை செய்த சதாவதானி செய்குத்தம்பி பாவலர், டி.கே. எஸ். சகோதரர்கள், தோழர் ஜஂவானந்தம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பேரா பா. நடராசன், நாஞ்சில் மனோகரன் போன்றோர் முக்கியமானவர்கள்.
=== வரலாற்றில் கன்னியாகுமரி ===
வட வேங்கடம் முதல் தென் குமரி வரையுள்ள பகுதி, தமிழ் கூறும் நல்லுலகம் என்று தொல்காப்பியத்திற்கு முன்னுரை வழங்கிய அதங்கோட்டாசான் குறிப்பிடுகிறார். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்த ஏராத் தோனஸ் என்ற அயல்நாட்டுப் பயணி குமரிமுனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெரிபுளூஸ், தாலமி இப்பகுதி பற்றி தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். மதுரை தொடங்கி குமரி வரையுள்ள பகுதி 'பாண்டி மண்டல'மாக இருந்தது. அதனால் இப்பகுதிபாண்டியர்களால் ஆளப்பட்டு வந்தது. இதற்கான சான்றுகளாக காட்டக்கூடிய ஊர்கள்: பாண்டியன் அணை, பாண்டியன் கால்வாய், பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம் என்ற பெயர்களால் உறுதிப்படுத்தப்படுகிறது. பாண்டிய பேரரசு குலைந்த பின்னர் இப்பகுதி மூன்றாகத் திகழ்ந்தது. 1) புறத்தாய நாடு (கன்னியாகுமரியும் அதன் சுற்றுப்புறங்களும் சேர்ந்த பகுதி) 2) நாஞ்சில் நாடு (அகத்தீஸ்வரம், தோவாளை வட்டங்களில் புறத்தாய நாடு நீங்களான பகுதி) 3. வேணாடு (கல்குளம், விளவங்கோடு) என்னும் இரு வட்டங்களையும் கொண்டது. முதலாம் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் சோழராட்சிக்கு உட்பட்ட வேளையில் இப்பகுதியும் சோழராட்சியின் கீழ் வந்தது. சேரநாட்டின் பாஸ்கர ரவியை தோற்றோடச் செய்து, அவன் கப்பற்படையைத் தீயிட்டு பொசுக்கினான் இராஜராஜன். அதனால் இராசராச சோழனுக்கு 'கேரளாந்தகன்' (கேரளனுக்கு எமன்) என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது. சோழர்களின் கல்வெட்டு குகநாதசாமி கோயிலில் கிடைக்கிறது. இதுதவிர, மும்முடிச் சோழபுரம், சோழ கேரளபுரம், ராஜ நாராயண சதுர்வேதி மங்கலம், சுந்தர சோழசதுர்வேதி மங்களம் போன்ற ஊர்களின் பெயர்கள் சோழராட்சிக்கு சான்றாகும். நாஞ்சில் நாட்டு வளம்- நாயக்கர்களால் பலமுறை கொள்ளையிடப்பட்டது. திப்பு சுல்தானின் படையெடுப்பையும் இப்பகுதி கண்டிருக்கிறது. 1729 முதல் 1949 வரை இப்பகுதி திருவிதாங்கூர் மன்னராட்சியில் இருந்து வந்தது. 1945 இருந்து 1956 வரை குமரி மாவட்ட தமிழர்கள் போராடி, சில பகுதிகளைப் பெற்று தமிழ்நாட்டுடன் இணைந்தனர்.
=== கன்னியாகுமரி மாவட்டம் பிறந்த கதை ===
1949க்குப் பின்னர் திருவாங்கூர்-கொச்சி அரசின் கீழ் தமிழர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டது. ஐக்கிய கேரளத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதையும் சேர்ப்பதற்கு மலையாளிகள் முயன்றனர். 1945ம் ஆண்டு முதல் மொழியை வைத்து தமிழ் பேசும்பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று தமிழர்கள் போராட ஆரம்பித்தனர்.1945 ஆம் ஆண்டு திருவாங்கூர் தமிழர் உரிமைப் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. குழுவில் பி.எஸ். மணி, இரா. வேலாயுதம், கே.நாகலிங்கம், காந்திராமன், ஆர்.கே. ராம், முத்தையா, மார்க்கண்டன் ஆகியோர் முன்முயற்சியில் எஸ். நத்தானியேல் தலைமையில் அகில திருவாங்கூர்த் தமிழர் காங்கிரஸ் என்ற அமைப்பினைத் தோற்றுவித்தனர். பின்னர் திருத்தம் செய்யப்பெற்று திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனப் பெயர் மாற்றம் பெற்றது. கதவடைப்பு, கருப்புக் கொடி ஊர்வலம் என்கிற முறையில் தமிழர் அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்திய விடுதலைக்கு பின்னர் திருவிதாங்கூரில் கேரள காங்கிரஸ் ஆட்சி தொடங்கியது. 1948 தேர்தலில் 4 வட்டங்களில் வெற்றி பெற்றனர் தமிழர். பட்டம் தாணுப்பிள்ளை முதல்வராக இருந்த இந்த காலக் கட்டத்தில் தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திப் பலரைக் கொன்றனர். பலர் மீது வழக்குகள் போடப்பட்டன. திருவாங்கூர்-கொச்சி ராஜ்ய இணைப்பை எதிர்த்து நேசமணி போராட்டம் நடத்தினார். 1954 ஆகஸ்ட் 11ம் நாள் விடுதலை நாளாக கருதப்பட்டு அறப்போராட்டங்களை நடத்தினர். தொடுவட்டியிலும், மார்த்தாண்டத்திலும் துப்பாக்கிச் சூட்டில் பல தமிழர்கள் உயிரிழந்தனர். 1955இல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றி பட்டம் தாணுப்பிள்ளையின் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது.
தமிழர்கள்அதிகமாக வாழ்ந்து வந்த பகுதிகள்: தோவாளை, அகத்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றங்கரை தேவிக்குளம்,பீர்மேடு, சித்தூர் வட்டங்களை தமிழ் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று வேண்டுகோளை 1955 அக்டோபர் 10 ஆம் நாள் இந்திய அரசிடம் அளித்தனர். ஆனால் இந்திய அரசோ தேவிக்குளம், பீர்மேடு, சித்தூர், நெய்யாற்றங்கரை பகுதி நீங்கலாக மற்ற பகுதிகளை இணைத்து கன்னியாகுமரி மாவட்டம் உருவானது. இதற்கான சட்ட வரைவு 1956 ஆம் ஆண்டு சென்னை சட்டசபையிலும், இந்திய பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது.
தமிழரின் பாரம்பரிய பகுதிகள் இழந்ததன் வாயிலாக பெரியார், சிறுவாணி, மற்றும் உள்ள ஆறுகள் தமிழக விவசாயத்திற்கு கிடைக்காமல் வீணாக அரபிக்கடலில் கலப்பதை இன்றும் காணலாம்.
=== கன்னியாகுமரி ===
மாவட்டத்தின் எல்லைகள்: வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டம். மேற்கில் கேரளமும்; தெற்கில் இந்துமகா கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.
Kanyakumariஇந்தியாவின் தென்கோடி முனையாக காட்சியளிக்கிறது. இவ்வூரிலேயே காலையில் சூரியோதயத்தையும், மாலையில் மறைவையும் கண்டு களிக்கலாம். சித்ரா பெளர்ணமியன்று சூரியன் மறைவதையும் சந்திரன் பெரிய பந்து போலத் தோன்றுவதையும் வேறு எங்கும் காண முடியாது. இந்துமகாக் கடல், வங்காள விரிகுடா, அரபிகடல் இவை மூன்றும் சங்கமமாவது இங்குதான். குமரித் துறையில் உள்ள கன்னியாகுமரியின் கோவில் பார்க்கத்தக்கது. கடல் நடுவில் உள்ள பாறைவிவேகானந்தரின் நினைவுப் பாறை என்று அழைக்கப்படுகிறது. 1892 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இங்கு வந்து ஸ்ரீபாத பாறையில் அறிவு விளக்கம் பெற்று சென்றதை நினைவு கூறும் வண்ணம் இங்கு 1970 ஆம் ஆண்டு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இது போலவே காந்தியண்ணலின் அஸ்தி கரைக்கப்பட்டதை நினைவு கூறும் வண்ணம், வட இந்திய பாணியில் இங்கு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அண்ணாவின் பிறந்த நாளான அக்டோபர் 2ந் தேதி சூரிய ஒளி இங்குள்ள மண்டபத்தில் விழும்படி கட்டப்பட்டுள்ளது. குகநாதசாமி கோயில் பழைமையானதாகும். இக்கோவிலில் இராசராசன் காலத்து கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அடுத்து பார்க்க வேண்டியது அரசு அரும்காட்சி சாலை. கலங்கரை விளக்கத்திலிருந்து இயற்கை காட்சிகளையும், கடற்காட்சிகளையும் காணலாம்.
=== நாகர்கோவில் ===
கன்னியாகுமரியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் தலைநகராகவும் இருக்கிறது.Nagarcoil இங்குள்ள நாகராஜா கோவில் பார்க்கத்தக்கது. இதன் வாயிலின் முகப்பு சீன முறையில் அமைந்த விகாரங்கள் பெளத்த பாணியைக் காண்பிக்கிறது. இக்கோயிலிலுள்ள தூண்களில் சமண தீர்த்தங்கர்களான மகாவீரர், பார்சுவநாதரின் உருவங்களைக் காணலாம். நாகராஜாவே முக்கிய கடவுள். இக்கோவில் முற்காலத்தில் சமணக் கோயிலாக இருந்திருக்கும் என்பது அறிஞர்கள் முடிவு. நாகர்கோவில் நகராட்சி 1900 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டது. இந்நகராட்சியின் பகுதிகள் வடசேரி, வடிவீஸ்வரம், கோட்டாறு, ஒழுகினசேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. பல கல்வி நிலையங்கள் மருத்துவமனை, போக்குவரத்திற்கும் மையமாக இருக்கின்றது. மாவட்டத் தலைநகரானதால் தொழில், வணிக நிலையமாகவும் விளங்கி வருகிறது.
== சுற்றுலா இடங்கள் ==
=== சுசீந்திரம் ===
Suchindramகன்னியாகுமரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தாணுமாலயன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. தமிழகப் பெருங்கோவில்களில் இது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. 135 அடி உயரமுள்ள கோபுரமும் எழுநிலை மாடமும் உடையது. இக்கோவிலில் சோழ, சேர, பாண்டிய, விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்நால்வரும் திருப்பணி செய்துள்ளனர். இக்கோவில் 9ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டதென கல்வெட்டு கூறுகிறது. அலங்கார மண்டபத்தின் கூரை ஒரே கல்லாலானது. இம்மண்டபம் சிற்பச் சிறப்புடையது. இராசராசசோழன் காலத்தில் கட்டப்பட்டது. சிவபெருமாள் (தாணு): மால் (விஷ்ணு); அயன் (பிரம்மா) ஆகிய மூன்று சிலைகளும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்திருப்பதால், தாணு மாலயப் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. கோவிலிலுள்ள அனுமார் சிலை 18 அடி உயரம் உடையது. இங்குள்ள திருமலை நாயக்கர் வடிவத்தில் காணப்படும் சிற்பத்தின் மூக்கில் வெளிவரும் அளவு நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளதைக் கண்டுகளிக்கலாம். நாட்டிய நங்கை, வெற்றிலை மடித்துத் தரும் மங்கை, குடைபிடித்த கட்டழகி போன்ற சிலைகள் உயிர் உள்ளவை போன்று இருக்கும். இதுதவிர, ஊஞ்சல் மண்டபம், சித்திரசபை, வசந்த மண்டபம், வெண்கல்லாலான நந்தி, பெரிய ஆஞ்சநேயர், கணேசன் திருவுருவம், பாவைப் பெண்களின் அரிய கலை வடிவங்கள், இந்திரனின் கதை கூறும் சுவரோவியங்கள் போன்றவை காணத்தக்கவை.
=== உதயகிரி கோட்டை ===
மார்த்தாண்ட வர்மா (1729-1758) காலத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. இக்கோட்டையில் துப்பாக்கி வார்ப்பதற்கானUdayakiri Fort தொழிற்சாலை இருந்தது. இங்கு டிலனாய் என்ற டச்சு வீரர் மார்த்தாண்ட வர்மா படையில் சேர்ந்து, உள்நாட்டு வீரர்களுக்கு படைபயிற்சியளித்து வந்தார். அவருடைய கல்லரை இங்கு காணப்படுகிறது. இக்கோட்டை நாகர்கோவில்- தக்கலை வழித் தடத்தில் உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 90 ஏக்கர் நிலப்பரப்பில், 5 1/2 மீ உயரத்திற்கு சுவர்கள் எழுப்பப்பட்டு, 4 1/2 மீ அகலத்தில் சுவர்களை அமைத்துள்ளனர். இக்கோட்டையின் உயர்ந்த பகுதியில் 'விருந்தினர் இல்லம்' இருக்கிறது.
=== வட்டக்கோட்டை ===
குமரி மாவட்டத்திலுள்ள இரண்டாவது கோட்டை இது. கன்னியாகுமரியிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இதுவும் மார்த்தாண்ட வர்மா காலத்தில் டிலனாயினால் கட்டப்பட்டது. இக்கோட்டையின் சிறப்பு, கடலை நோக்கி அமைந்திருப்பதுதான். இது கடற்குளியலுக்கும் சுற்றுலாவுக்கும் ஏற்ற இடம்.
=== திப்பரப்பு அருவி ===
Thirparappuகன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. கோதையாற்றின் கரையில் அமைந்துள்ளது. நீர்வரத்து அதிகம் உள்ள காலங்களில் அருவி அழகாகக் காணப்படும். இங்கு ஆறு, அருவி, கோவில் மூன்றும் ஒருசேர பார்ப்பதற்கு அழகான காட்சிகள் ஆகும். இக்கோவில் மகாதேவர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள 2 அருவிக்கு பெயர்: பத்ரகாளி குண்டு, தெங்கம்புதூர்.
=== முட்டம் ===
கன்னியாகுமரியிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் கடலை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு அழகான கடற்கரையும், கலங்கரை விளக்கமும் உண்டு. சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. ஊருக்குள் கடல் உள்நோக்கி அரைவட்ட வடிவத்தில் அமைந்திருப்பதாலும் ஊர் மிக உயரத்திலிருப்பதாலும் உடல் நலத்திற்கேற்ற வாழ்விடமாக இது அமைந்துள்ளது.
=== பேச்சிப்பாறை ===
கன்னியாகுமரியிலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கும் எல்லையாகPechiparai அமைந்துள்ள மலைத் தொடரை வைத்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் பெரிய அணை இதுவேயாகும். 1894 ஆம் ஆண்டு கோதையாறு அணைத்திட்டம் தொடங்கப்பட்டு 1905 இல் சுமார் 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. கோதையாறு அணையே பேச்சிப்பாறை அணை எனப்படுகிறது. இத்தேக்கத்தில் 350 கோடி கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடிகிறது. இதன் மூலம் சுமார் 56,000 ஏக்கர் நிலம் பாசனம் பெற இயலுமென்று கூறப்படுகிறது. நாஞ்சில் நாட்டை நெற்களஞ்சியம் ஆக்குவதற்கு இந்த அணை பெரிதும் உதவுகிறது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு படகு செலுத்துதல் சுகமான அனுபவமாகும். அணையின் எதிர்ப்புறம் வரை செல்ல குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
=== பெருஞ்சாணி அணை ===
இந்த அணை கன்னியாகுமரியிலிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதுவும் ஒரு சுற்றுலாத்தலமாகுமPerunchani். இந்த அணை 1948 இல் தொடங்கப்பட்டு 1958இல் முடிக்கப்பட்டது. 50 இலட்சம் ரூபாயில் செலவில் கட்டப் பட்டது.இந்த அணையில் உண்டாக்கப்பட்ட நீர்த்தேக்கம் 33.34 சதுர மைல் பரப்பாகும். இந்நீர்த் தேக்கம் திருவனந்தபுரத்தின் தென்கிழக்கு, 58 கி.மீ. தொலைவிலும், குலசேகரம் என்னு மிடத்திலிருந்து 10 கி.மீ.கிழக்கிலும் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் 6000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.
=== கீரிப்பாறை ===
காளிகேசம்:
பெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தில் சிறு அம்மன் கோவில் உள்ளது.
கீரிப்பாறையிலிருந்து மேலே செல்வதற்கு நல்ல வண்டித்தார்ச்சாலை உள்ளது. சிற்றுந்துகள் மூலம் போகலாம். இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என்கின்றனர். சிறுசிறு சரிவுகளில் அருவியாகவும் காட்சியளிக்கிறது. பாறைகளைக் குடைந்தும், அறுத்துக் கொண்டும் ஓடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். ஆறு அறுத்த பாறை ஒன்றில் பழங்குடியினர் இருந்த தற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன.
=== பத்மநாபபுரம் ===
Padmanapapuramகன்னியாகுமரியிலிருந்து 45 கி.மீ. உள்ளது. மன்னர் கால திருவாங்கூரின் தலைநகராக கி.பி. 1744 முதல் இருந்தது. அரண்மனை 6 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த அரண் மனையில் அரசர், அமைச்சர், அலுவலர்களுக்கு, பல கட்டடங்கள் இருக்கின்றன. இங்குள்ள இராமசாமி கோவிலில் இராமாயணக் கதை 45 காட்சிகளாக சித்தரிக்க ப்பட்டுள்ளது. இந்த அரண்மனை காலை ஒன்பது மணிமுதல் மாலை 5 வரை திறந்திருக்கும். திங்கள் விடுமுறை.
== இங்கு காணவேண்டியவை ==
இந்திர விலாசம், தாமிரக் கடிதங்கள், கல்வெட்டுகள், பழங்கால நாணயங்கள், போர்க்கருவிகள் போன்றவை காட்சிக் கூடத்தில் உள்ளன. இதுதவிர, ஒரே மரத்தால் செய்யப்பட்ட சன்னல், வேனிற்காலத்தில் அரசர் படுக்கும் கல்கட்டில், பெரிய விருந்து மண்டபம், ஒரே மரத்தில் செய்யப்பட்ட தூணும் அதில் கடைந்தெடுத்த வளையமும், தூண்ட மணிவிளக்கு, சித்த மருத்துவக் கட்டில், அரசரின் வாள், நீராடுமிடம், பெரிய விலங்கும் காணத்தக்கவை. 17ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கடிகாரம் புகழ்பெற்றது. இது தவிர ஓவியக்கூடம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம். இங்கு திருவிதாங்கூர் அரசர் முடிசூட்டு விழா, திப்புவின் தோல்வி, நாஞ்சில் நாட்டுத் தமிழர்களால் மன்னர் காப்பாற்றப்பட்டது போன்ற சம்பவங்கள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
=== சிதாறல் என்கிற திருச்சாரத்து மலை ===
Sitharalஇவ்வூர் கன்னியாகுமரியிலிருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மலை மீது கோவில் அமைந்துள்ளது. இது சிறந்த சுற்றுலாத் தலம். சமணச் சிற்பங்கள் காணத் தக்கவை. நாகர்கோவில் நாகராஜா கோவிலும், திருச்சாரணத்து மலையும் கன்னியா குமரியில் சமணம் இருந்ததை பறைசாற்றுகின்றன.
=== இங்குக் கிடைத்துள்ள கல்வெட்டு மூலம் கிடைக்கும் செய்தி ===
Sitharal
இக்கல்வெட்டு விக்ரமாதித்ய வரகுணப் பாண்டியன் காலத்து இக்கோவில் முத்துவாள நாராயண குரத்தியார் என்ற சமண சமயப் பெண் துறவியால் எழுப்பப்பட்டது என்றும், கோயிலுக்கு ஒரு விளக்கும், தங்க மலரும் அவர் காணிக்கை யாகக் கொடுத்தார் என்றும் தெரிகிறது. அரிட்டநேமி படாரரின் மாணக்கியாகிய குணந்தாங்கி குறத்திகள் திருச்சாரத்துமலை படாரியார்க்குப் பொன் நகைகளும், பூவும் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறது. மேலும் இங்குச் சமணர்களின் கல்வி நிலையம் இருந்ததற்கான ஏதுக்கள் கிடைக்கின்றன. பெண் சமணத் துறவியின் மக்களுக்குக் கல்வி புகட்டியதும், மக்களிடம் சமணப் பிரச்சாரம் செய்ததும் தெரியவருகிறது.
=== திருநந்திக்கரை குகைக் கோயில் ===
இவ்வூரும் பழங்கால சமணத் தலமாகும். பின்னர் சைவர்களுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இங்குள்ள கபோதரத்தில் உள்ள மாதேவர் ஓவியம்தான் சேரர் கால ஓவியங்களில் கிடைத்த ஒரே சான்று. விக்கிரமாதித்ய வரகுணன் திருநந்திக் கரையில் தங்கி இருந்ததாகவும், ஒரு சமணத் துறவியியின் முன்னிலையில் தெங்கு நாட்டுக் கிழவன் மகள் முருகன் சேத்தியை திருமணம் செய்து கொண்டதாகவும், அரசியின் வாழ்க்கைக்குத் தேவையான நிலங்களை விட்டுக் கொடுத்ததாகவும் வரகுணன் காலத்திய செப்பேடு கூறுகிறது. இவ்வூர் பார்க்க வேண்டிய ஓரூராகும். பாறையில் அமைக்கப்பட்ட கோயிலுள் புகுவதற்கு வாயிலும், மழைநீர், வாயிலுக்கு வராமல் மேலே ஓடையும் அழகுபெற அமைக்கப்பட்டுள்ளன.
=== திருவட்டாறு ===
முப்புறமும் ஆறு சூழ்ந்த தீபகற்பம் இவ்வூர். நாகர்கோவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது. வளைந்து வட்டமாக ஆறு இருப்பதால் வாட்டாறு என்று ஆற்றின் பெயரே நிலைத்து விட்டது. கேரள வர்ம ராஜா என்ற திருவிதாங்கூர் படைத்தலைவன், திப்பு சுல்தான் படையை வென்றதும் இங்குதான் படை சங்கீதர்த்தனம் என்ற வெற்றி விழா நடத்தியதாகக் கூறுவர். இக்கோவிலின் பழமையைக் காட்டும் வேணாட்டு அரசன் வீர உதயமார்த்தாண்ட வர்மா திருவடி கல்வெட்டு. கி.பி. 1174 இல் வடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயம், 108 வைணவ தலங்களில் ஒன்று. 13 மலைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாக திகழ்கிறது. நம்மாழ்வார், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் முதலியோரின் பாடல் பெற்றத் தலம். இக்கோவிலில் பார்க்கத்தக்க கல், மரசிற்பங்கள் உண்டு. 18 அடி சதுரம், 3 அடி உயரமும் உள்ள ஒற்றைக்கல் மண்டபம். தூண்களில் செதுக்கப்பட்டுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட லட்சுமி உருவங்கள் பலவிதங்களில் காட்சி தருகின்றன. கோயிலின் கூரையில் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சங்கலி தொங்குவதைக் காணலாம். அது போலவே கோயிலின் கதவிலும் அதிசயித்தக்க வேலைப்பாட்டுடன் சிற்பங்கள் உள்ளன. இக்கோவில் தமிழக-கேரள கலைத்திறனுக்கு சான்றாக விளங்குகிறது. சுவர்களில் வண்ண ஓவியங்கள் இன்றும் அழியாமல் காண்போரைத் தம்வசம் இழுக்கின்றன. சமய சுற்றலா தளமாக இதனைக் கொள்ளலாம்.
=== வேளிமலைக் குமாரர் கோவில் ===
Velimalaiஆறு படை வீடுகளுள் ஒன்றாகக் குறிப்பிடப்படும் 'ஏரகம்' இதுதான் என்பது ஆய்வாளர்கள் முடிவு. அதற்கு சான்றாக அவர்கள் காண்பிப்பது இதுதான். ஈர உடையுடன் ஆலயஞ்சென்று வழிபடும் முறை ஏரகத்தில் இருப்பதாக திரு முருகாற்றுப்படையில் கூறப்படுகிறது. 'ஏரகம்- மலைநாட்டகத்தொரு திருப்பதி' என்பதால் மலைநாடு என்பது சேரநாட்டிலுள்ள இந்த குமாரக் கோவிலையே குறிப்பிடுகிறார் உரையாசிரியர் என்பது தெளிவாகிறது. வேளி என்னும் சொல் திருமணம் என்ற பொருளில் மலையாள மொழியில் வழங்கி வருகிறது. முருகன் இங்கு வள்ளி யுடன்தான் இருக்கிறார். இவ்வூர் நாகர் கோவிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. இயற்கை சோலை சூழ இவ்வூர் காணப்படுகிறது. மலைமேல் கோவில் அமைந்துள்ளது. 38 படிகள் ஏறவேண்டும். மூலவரான முருகன் எட்டடி உயரத்தில் காட்சியளிக்கிறார். வள்ளியம்மை 6 அடி உயரம். ஸ்தல விருட்சம்: வேங்கை மரம்; வள்ளித் திருமணத்தைக் குறிக்கும்படியான இடங்கள் உள்ளன. வள்ளிச்சோலை, கிழவன் சோலை என்பன அவை. முருகன் வள்ளியை மணந்த திருமண நிகழ்ச்சியே இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இதை 'குறவன் படுகளம்' என்று அழைக்கின்றனர். இந்நிகழ்வில் குறவர்களே பங்கேற்கின்றனர். முருகப்பெருமானைக் குறிக்கும் வேலன், வேள் என்ற சொற்களே குமரனைக் குறிக்கவேளி என்றாகி விட்டது என்பது ஆய்வாளர் முடிவு.
=== அவ்வையாரம்மன் கோவில் ===
அவ்வையை அம்மனாக்கி 'அவ்வையாரம்மனாக' வழிபடும் இடமாக இவ்வூர் உள்ளது. நாகர்கோவிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டில் அவ்வையாருக்கு கோயில் உள்ள ஒரே கோவில் இவ்வூராகும். இது தவிர அவ்வையார் சிலை குறவன் தட்டுவிளை குடைவரைக் கோவிலில் காணப்படுகிறது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114748" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி