சிறகுகள் (திரைப்படம்)
சிறகுகள் (Siragugal English: Wings ) ராதிகா கதை எழுதிய, கலாநிதி மாறன் தயாரித்த, மனோபாலா மற்றும் ராதிகா இணைந்து இயக்கிய இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். இலண்டனை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராதிகா மற்றும் விக்ரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர், தேவன் துணை வேடத்தில் நடித்தார். இது சன் டிவியில் தொலைக்காட்சி படமாக வெளியிடப்பட்டது. தீனா இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[1] இந்தப் படம் பதினைந்து நாட்களில் இலண்டனில் படமாக்கப்பட்டது.[2]
கதை
வள்ளி ( ராதிகா ) தனது கணவர் விஷ்வா மற்றும் குழந்தைகளுடன் வசிக்கும் ஒரு இல்லத்தரசி ஆவார். இலண்டனில் ஐஸ்வர்யா மற்றும் கௌசல்யா ஆகிய குழந்தைகளோடு வசித்து வருகிறார். வள்ளியின் கணவருக்கு அவள் மீதோ அல்லது அவரது குழந்தைகள் மீதோ பாசம் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் தனது மனைவியை அவமானப்படுத்துகிறார். ஆனாலும், வள்ளி தன் குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறார். வள்ளியின் மூத்த மகள் ஐஸ்வரியா தனது இளமைப் பருவம் மற்றும் செயல்பாடுகளால் எப்போதும் தனது தாயைப் பற்றி கவலைப்படுகிறார். ஐசு தனது தாயின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, அவளுடைய தந்தையைப் போலவே தாயை காயப்படுத்துகிறாள். ஆனால் வள்ளி தன் மகள் பின்பற்றாத கலாச்சாரம் மற்றும் மரபுகள் பற்றி அதிகம் கவலைப்படுகிறாள்.
சந்திரசேகர் ( விக்ரம் ) தனது மகள்கள் தீபா மற்றும் சில்பாவுடன் இலண்டனில் வசிக்கும் ஒரு தொழிலதிபர். அவர் மேற்கத்திய வாழ்க்கைமுறையில் அதிக அக்கறை கொண்ட அவரது மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்கிறார் மற்றும் அவளுடைய இயல்பினால் அவருடன் வாழ விரும்பவில்லை. தீபாவும் ஐஸ்வர்யாவும் நல்ல நண்பர்கள். ஒரு நாள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் சில ஆண் தோழர்களுடன் டேட்டிங் சென்ற போது விபத்தாகிறது. வள்ளி தனது கணவரைத் தொடர்பு கொள்ள முயன்றார், மேலும் தனது கணவர் லாவண்யா என்ற மற்றொரு பெண்ணுடன் சட்டவிரோதமான உறவைக் கொண்டிருப்பதைக் கண்டார். வள்ளியுடன் ஒரு சிறிய சண்டையில் அவர் தனது குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார், அவளை மன்னிக்கும்படி கெஞ்சுகிறார். ஆனால், விஷ்வா வள்ளியிடம் அவள் வேலைக்காரப் பணிப்பெண்ணாக கூட இருக்க தகுதியற்றவள் என்று சொல்கிறார்
சந்திரசேகரும் வள்ளியும் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி விவாதிக்கும்போது அவரை அவமதித்து அவரை வெளியேறச் சொல்கிறார். விஷ்வாவுடன் வாழ இயலாது என்பதை புரிந்து கொண்ட வள்ளி அவரை வீட்டை விட்டு வெளியேறும்படி கேட்கிறார். திருமணம் செய்ய வறுபுறுத்தப்படடுகிறார். ஆனால், அவள் எந்த உறவுகளிலும் ஆர்வம் காட்டவில்லை மற்றும் அவளுடைய கலாச்சாரத்திலிருந்து விலக விரும்பவில்லை. அவள் தன் மகள்களை தனது கலாச்சார விழுமியங்களுடன் வளர்க்க வேண்டும் என விரும்புகிறார். சந்திரசேகர் தனது மனைவியுடன் மீண்டும் ஒன்றிணைந்தார். வள்ளி தன் மகளைத் திரும்ப அழைத்துச் செல்கிறாள். விஷ்வா தனது மகள் கவுசல்யாவை அழைத்தபோது, அவரை எப்போதும் வீட்டிற்கு வர வேண்டாம் என்று கூறுகிறார்.
ஒப்பீடு
ஜோதிகா -36 வயதினிலே (2015) வெளியானதைத் தொடர்ந்து, விமர்சகர்கள் பெண்ணின் கதையினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தோடு ஒப்பிட்டனர்.[3]
மேற்கோள்கள்
- ↑ "Listen to Uyire Uyire - Drnarayanan Song by Dr. Narayanan on Gaana.com" இம் மூலத்தில் இருந்து 2021-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210927090646/https://gaana.com/song/uyire-uyire.
- ↑ "Rediff On The NeT, Movies: Gossip from the southern film industry". https://m.rediff.com/movies/1999/jul/26ss.htm.
- ↑ "News18.com: CNN-News18 Breaking News India, Latest News Headlines, Live News Updates". http://www.ibnlive.com/news/reviews/36-vayadhinile-review-this-rosshan-andrews-directed-film-serves-as-a-perfect-comeback-vehicle-for-jyotika-990976.html.