சித்திரைச் செவ்வானம்
சித்திரைச் செவ்வானம் | |
---|---|
இயக்கம் | சில்வா |
தயாரிப்பு | ஏ. எல். விஜய் பி. மங்கையர்க்கரசி |
இசை | சாம் சி. எஸ். |
நடிப்பு | சமுத்திரக்கனி பூஜா கண்ணன் ரீமா கல்லிங்கல் |
ஒளிப்பதிவு | மனோஜ் பரமஹம்சா கே. ஜி. வெங்கடேஷ் |
கலையகம் | ஜீ ஸ்டுடியோஸ் திங்க் பிக் ஸ்டுடியோ அமிர்தா ஸ்டுடியோஸ் |
விநியோகம் | ஜீ5 |
வெளியீடு | திசம்பர் 3, 2021 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சித்திரைச் செவ்வானம் (Chithirai Sevvaanam) சமுத்திரக்கனி , பூஜா கண்ணன் ஆகியோர் நடிப்பில் சில்வா இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். ஏ. எல். விஜய்யின் திங்க் பிக் ஸ்டுடியோஸ் தயாரித்தது. இது 3 திசம்பர் 2021 அன்று ஜீ5 இல் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
- முத்து பாண்டியாக சமுத்திரக்கனி
- ஐஸ்வர்யாவாக பூஜா கண்ணன்
- இளம் வயது ஐஸ்வர்யாவாக மானஸ்வி கொட்டாச்சி
- ஆஷா நாயராக ரீமா கல்லிங்கல்
- லட்சுமியாக வித்யா பிரதீப்
- ஆஷாவின் கணவராக அரவிந்து ஆகாசு
தயாரிப்பு
சண்டை இயக்குநர் சில்வா இயக்குனராக அறிமுகமான படத்தில் நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் அறிமுகமானார்.[1] ரீமா கல்லிங்கல் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு இந்தத் படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படங்களுக்குத் திரும்பினார்.[2][3]
சில்வா ஆரம்பத்தில் ஒரு நகைச்சுவைத் திரைப்படத்தில் தான் அறிமுகமாவதில் முனைப்பாக இருந்தார். ஆனால் அவரது நண்பர் ஏ. எல். விஜய்யின் வேண்டுகோளின்படி "சித்திரைச் செவ்வானம்" படத்தை இயக்கினார். ஏ. எல். விஜய் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் கூட.[4]
வெளியீடு
படம் நேரடியாக ஜீ5 இல் 3 திசம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டு, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சிஃபியின் ஒரு விமர்சகர் படத்தை "அதன் முக்கிய கருப்பொருள் கண்ணியமாக உள்ளது. ஆனால் செயல்படுத்தியது சராசரியாக உள்ளது" என்று கூறினார்.[5] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா அவர்களின் மதிப்பாய்வில், " சித்திரைச் செவ்வானம்" என்பது தொழில்நுட்பத்தின் அபாயங்கள் மற்றும் பெண்கள் எவ்வாறு எளிதான இலக்குகள் என்பதைப் பற்றி பேசும் நல்ல நோக்கத்துடன் கூடிய திரைப்படம்" என்றது. படம் பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கை அடிப்படையாகக் கொண்டது. இந்த திரைப்படம் அதன் தருணங்களைக் கொண்டுள்ளது. ஆனால் அது இழுபறியான திரைக்கதை காரணமாக பெரும்பாலும் தோல்வியடைகிறது." [6] நியூஸ்மினிட் இதை "பாலியல் வன்முறை பற்றிய நல்ல எண்ணம் கொண்ட ஆனால் குழப்பமான படம்" என்று என்றது.[7]
சான்றுகள்
- ↑ "‘I don’t want to be a copy of Sai Pallavi’: Pooja Kannan". https://www.newindianexpress.com/entertainment/tamil/2021/dec/07/i-dont-want-to-be-acopy-of-sai-pallavi-2392546.html.
- ↑ "Rima Kallingal: Women with strong voices find themselves deprived of opportunities". https://www.cinemaexpress.com/tamil/interviews/2021/dec/14/rima-kallingal-women-with-strong-voices-find-themselves-deprived-of-opportunities-28431.html.
- ↑ "‘I’m looking forward to getting behind the camera’". https://www.newindianexpress.com/entertainment/malayalam/2021/dec/17/im-looking-forward-to-getting-behind-the-camera-2396342.html.
- ↑ "‘Films shouldn’t turn into moral lessons’". https://www.newindianexpress.com/entertainment/tamil/2021/dec/13/films-shouldnt-turn-into-moral-lessons-2394821.html.
- ↑ "Chithirai Sevvanam review: An emotional thriller" இம் மூலத்தில் இருந்து 2021-12-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211203045238/https://www.sify.com/movies/chithirai-sevvanam-review-an-emotional-thriller-review-tamil-vmde8acajfbee.html.
- ↑ "Chithirai Sevvanam Review: A well intentioned but draggy melodrama". https://timesofindia.indiatimes.com/web-series/reviews/tamil/chithirai-sevvanam/ottmoviereview/87904373.cms.
- ↑ "Chithirai Sevvanam review: A well-intentioned but confused film on sexual violence". 3 December 2021. https://www.thenewsminute.com/article/chithirai-sevvanam-review-well-intentioned-confused-film-sexual-violence-158344.