சிடேசைட்டு
Jump to navigation
Jump to search
| சிடேசைட்டு Steacyite | |
|---|---|
| படிமம்:Steacyite.jpg கியூபெக்கில் கிடைத்த சிடேசைட்டு படிகங்கள் | |
| பொதுவானாவை | |
| வகை | வளையசிலிக்கேட்டு |
| வேதி வாய்பாடு | Kமாறி(Ca,Na)2(Th,U)Si8O20 |
| இனங்காணல் | |
| நிறம் | சாம்பல், அடர் பழுப்பு, பச்சை, பழுப்பு |
| படிக அமைப்பு | நாற்கோணம் |
| மோவின் அளவுகோல் வலிமை | 5 |
| மிளிர்வு | பளபளக்கும், உயவுத்தன்மை, மங்கல் |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளி கசியும், ஒளிபுகாது |
| பிற சிறப்பியல்புகள் | |
சிடேசைட்டு (Steacyite) என்பது Kமாறி(Ca,Na)2(Th,U)Si8O20 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். தோரியத்தையும் யுரேனியத்தையும் கொண்டுள்ள ஓர் ஒருங்கிணைவு சிலிக்கேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. சிறிய பழுப்பு அல்லது மஞ்சள் பச்சை படிகங்களாக சிடேசைட்டு உருவாக்குகிறது. பெரும்பாலும் சிலுவை இரட்டை படிகங்களாக காணப்படுகிறது. கதிரியக்கப் பண்பைக் கொண்டுள்ளது. 1982 ஆம் ஆண்டில் கியூபெக்கில் உள்ள செயிண்ட் இலேர் மலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கனிமவியலாளர் அரோல்ட் ராபர்ட் சிடேசி (1923-2012) நினைவாக கனிமத்திற்கு சிடேசைட்டு என்று பெயரிடப்பட்டது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிடேசைட்டு கனிமத்தை Scy[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.