சிங்கை நேசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிங்கை நேசன் முதலாம் இதழில் தோற்றம் 1887

சிங்கை நேசன் சிங்கப்பூரிலிருந்து 19ம் நூற்றாண்டின் இறுதிக்காலப் பகுதியில் தமிழ்மொழியில் வெளிவந்த ஒரு பத்திரிகையாகும். பினாங்கிலிருந்து இப்பத்திரிகை வாரம்தோறும் வெளிவந்துள்ளது.

ஆசிரியர்

சி. கு. மகுதூம் சாகிப்.

பணிக்கூற்று

சிங்கப்பூரில் குடிவாழும் முகமதியரும், இந்துக்களுமாகிய நாங்கள் சிங்கை நேசன் பத்திரிகையைத் தொடங்குவதில் எம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றோம்

முதல் இதழ்

இறுதி இதழ்

பாதுகாப்பு

இப்பத்திரிகையின் வெளிவந்த சகல இதழ்களும் சிங்கப்பூர் இராபில்சு நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.

இசுலாமிய விடயங்களுக்கு முக்கியத்துவம்

இதுவொரு செய்தி இதழாகக் காணப்பட்டபோதிலும்கூட, இசுலாமிய மார்க்க விடயங்களுக்கு கூடுதலான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருக்குறள்

இவ்விதழின் முழக்கமாக தான் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற பின் என்குற்றமாகும் இறைக்கு என்ற திருக்குறள் வாசகம் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றது. ஒரு இதழின் முகப்பில் திருக்குறள் இடம்பெற்றது இதுவே முதல் முறை என்று உவமைக் கவிஞர் சுரதா கூறியிருந்தார்.

ஆதாரம்

சாமி அ.மா. தமிழில் இஸ்லாமிய இதழ்கள், நவமணி பதிப்பகம் சென்னை. 600 004

"https://tamilar.wiki/index.php?title=சிங்கை_நேசன்&oldid=26621" இருந்து மீள்விக்கப்பட்டது