சாவித்திரி (1980 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சாவித்திரி
Savithiri
இயக்கம்பரதன்
கதைஏ. எல். நாராயணன் (உரையாடல்கள்)
திரைக்கதைபத்மராசன்
இசைம. சு. விசுவநாதன்
நடிப்பு
  • வினோத்
  • மேனகா
  • சே. வி. ரமண மூர்த்தி
    நந்திதா போசு
ஒளிப்பதிவுராமச்சந்திர பாபு
படத்தொகுப்புஎன்.பி.சுரேசு
வெளியீடு1980
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாவித்திரி (Savithiri) இந்தியாவில் வெளியான தமிழ்மொழி நாடகத் திரைப்படமாகும். இயக்குநர் பரதன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. 1975 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படமான பிராயணம் என்ற படத்தின் மறு ஆக்கமாகவும் தமிழகத் திரைப்படத் துறையில் பரதனுக்கு அறிமுகத் திரைப்படமாகவும் சாவித்திரி அமைந்தது. நடிகர்கள் வினோத், மேனகா, சே. வி. ரமண மூர்த்தி, மனோரமா, நந்திதா போசு மற்றும் குரு சுரேசு ஆகியோர் நடித்துள்ளனர். பத்மராசன் திரைக்கதையையும் முழு படத்திற்கான உரையாடல்களையும் எழுயுள்ளார்.

ம. சு. விசுவநாதன் இயசையமைத்த பாடல்களுக்கு கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். இப்படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[1] பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய கதாபாத்திரங்களின் சித்தரிப்புக்காக படம் வெளியானவுடன் சர்ச்சைக்குள்ளானது. இது சென்னை சமூகத்தின் உறுப்பினர்களால் பரவலான எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது.[2]

நடிகர்கள்

  • வினோத்
  • மேனகா - சாவித்திரி
  • இரமண மூர்த்தி - கோயில் குருக்கள்
  • நந்திதா போசு
  • நித்தியா
  • மாஸ்டர் சுரேஷ்
  • மனோரமா
  • பாக்கியலட்சுமி
  • ராஜகுமாரி
  • சீதாராம சர்மா
  • சுரேந்திரன் சதீஷ்
  • டான்னிஸ் - (ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து நடித்த நடிகை)

ஒலிப்பதிவு

படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்துள்ளார்.[3][4] கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்