சார்லஸ் எம். இலிஸ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
Charles M. Inglis DSCN5098.jpg

சார்லஸ் மெக்ஃபர்லேன் இங்லிஸ் (Charles McFarlane Inglis, 8 நவம்பர் 1870–13 பெப்ரவரி 1954) என்பவர் ஒரு இயற்கையியலாளர் ஆவார். இவர் 1923 முதல் 1948 வரை இந்தியாவில் உள்ள டார்ஜீலிங் அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக இருந்தார். [1] இந்த அருங்காட்சியகம் வங்காள இயற்கை வரலாற்றுச் சங்கத்தால் நடத்தப்பட்டது. இவர் தொடங்கி ஆசிரியராக இருந்த அந்த சங்கத்தின் இதழில் இவரது பல எழுத்தாக்கங்ள் வெளியிடப்பட்டன.

1919 இல் இங்கிலிஸ் (இடமிருந்து நான்காவதாக அமர்ந்துள்ளவர்)

இங்லிஸ் ஸ்காட்லாந்தில் உள்ள எல்ஜினில் பிறந்தார். ஓய்வு பெற்ற இண்டிகோ தோட்டக்காரரான ஆர்க்கிபால்ட் இங்லிஸின் மகனாக இவர் 18 வயதில் இந்தியா வந்தார். [2] இங்லிசின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, ஆனால் இவர் இன்வெர்னசில் இருந்த அலுவலக வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்குச் சென்றார். இந்தியாவில் இவர் முதலில் ஐலேகண்டியில் உள்ள ரூபச்சேரா தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்தார். ஆலன் ஆக்டேவியன் ஹியூமிடம் பணிபுரிந்த ஒரு சேகரிப்பாளர் ஒரு மாங்குயிலின் மாதிரியைக் காட்டிய பிறகு இவருக்கு பறவைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதன் பின்னர் இவர் பறவையியலாளரான இசி ஸ்டூவர்ட் பேக்கரைத் தொடர்பு கொண்டார். 1898 இல் இவர் பாகோவ்னியில் இண்டிகோ தோட்டக்காரர் ஆனார். இந்த நேரத்தில் இவர் பறவைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, பட்டாம்பூச்சிகள் மற்றும் தும்பிகளின் பல மாதிரிகளை சேகரித்தார். [1] 1923 இல் இவர் டார்ஜிலிங் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார். ஓய்வு பெற்றவுடன் குன்னூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் 1954 இல் இறந்தார். [3] [4]

பறவைகளை வரைவதிலும் விளக்குவதிலும் இவர் திறமையுடையவராக இருந்ததால் இந்தியாவில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பறவைகள் பற்றிய தொடர் கட்டுரைகளை உருவாக்க தாமஸ் பெயின்பிரிக் ஃப்ளெட்சரால் அழைக்கபட்டார். அக் கட்டுரைகள் அக்ரிகல்சுரல் ஜர்னல் ஆஃப் இந்தியாவில் வெளியிடப்பட்டன. பின்னர் அவை தொகுக்கப்பட்டு 1924 இல் பேர்ட்ஸ் ஆப் அன் இண்டியன் கார்டன் என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. [4]

இங்லிஸ் 1903 ஆம் ஆண்டு பிகாரில் செந்ததலை வாத்தின் எட்டு மாதிரிகளை சேகரித்தார். இதில் கடைசியாக அறியப்பட்ட மாதிரி 1935 சூனில் பகோவ்னியில் இருந்து சேகரிக்கப்பட்டது. [5] இவர் இறந்த பிறகு இவரின் மனைவி சிபில் டோரத்தி ஹண்ட், இவரது சேகரிப்பில் இருந்த இரண்டு பாடம் செய்யப்பட்ட செந்தலை வாத்துகள் உட்பட இவரது சேகரிப்புகளை சென்னை அருங்காட்சியகத்துக்கு வழங்கினார்.[6]

வெளியீடுகள்

  • Baker, H. R. & C. M. Inglis. The Birds of Southern India including Madras, Malabar, Travancore, Cochin, Coorg and Mysore. Government Press, Madras (1930)
  • Fletcher, T. B. and C. M. Inglis Birds of an Indian Garden. Calcutta & Simla: Thacker, Spink & Co. (1924)
  • Inglis C. M. The leaf insect – Phyllium scythe Gr. J. Darjeeling Nat Hist. Soc. 5 : 32–33 (1930)

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Obituary". Journal of the Bengal Natural History Society 24: 1–8. 1954. பன்னாட்டுத் தர தொடர் எண்:0409-0756. )</re>Warr, F. E. 1996. Manuscripts and Drawings in the ornithology and Rothschild libraries of The Natural History Museum at Tring. BOC.
  2. History of Behar. https://archive.org/stream/cu31924024077806#page/n287/. 
  3. Ali, Salim (1983). "Bombay Natural History Society - the Founders, the Builders and the Guardians. Part 4.". Journal of the Bombay Natural History Society 80: 320–330. https://www.biodiversitylibrary.org/page/48743924. 
  4. 4.0 4.1 "Charles M. Inglis". Journal of the Bombay Natural History Society 52: 565–568. 1955. https://www.biodiversitylibrary.org/page/48184453. 
  5. Inglis, C.M. (1940). "Records of some rare, or uncommon, geese and ducks and other water birds and waders in North Bihar.". Journal of the Bengal Natural History Society 15 (2): 56–60. பன்னாட்டுத் தர தொடர் எண்:0409-0756. இணையக் கணினி நூலக மையம்:10654633. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சார்லஸ்_எம்._இலிஸ்&oldid=25586" இருந்து மீள்விக்கப்பட்டது