சாருமதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சாருமதி (ஒக்டோபர் 26, 1947 - செப்டெம்பர் 28, 1998) ஈழத்து எழுத்தாளரும், கவிஞருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மூளாய் கிராமத்தில் பொன்னுச்சாமி கந்தசாமி, அப்பாத்துரை செல்லக்கண்டு புதல்வராகப் பிறந்தார். இயற்பெயர் யோகநாதன் ஆகும்.ஆரம்பக் கல்வியை வண்ணார்ப்பண்ணை நாவலர் வித்தியாலயத்தில் கற்றார். இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி,மட்டக்களப்பு அரசினர் கல்லூரி( தற்போதைய இந்துக் கல்லூரி)ஆகியவற்றில் கற்றார்.

தொழில்

சிறிது காலம் இலங்கை மலேரியத் தடுப்பு இயக்கத்தில் பணி புரிந்தபின் 1977 இல் ஆசிரியராகப் பணியேற்றார்.

இலக்கியத்துறை

சாருமதியின் இலக்கியப் பிரவேசம் 60களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த வசந்தம் மாத இதழ் மூலம் தொடங்கியது எனலாம்.கம்யூனிசக் கட்சி ஈடுபாட்டுடன் மார்க்சிச லெனினிச சித்தாந்தங்களை உள் வாங்கியதாக இவரது எழுத்துக்கள் பரிணமித்தன. அப்போது இக்கொள்கைகளை ஆதரித்து வெளிவந்த மனிதன்,செம்மலர், தேசாபிமானி முதலான சஞ்சிகைகளில் தீவிரமாக எழுதினார்.

எழுதிய நூல்கள்

"https://tamilar.wiki/index.php?title=சாருமதி&oldid=2291" இருந்து மீள்விக்கப்பட்டது