சாரதா சந்தோஷ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இயற்பெயர்/
அறியும் பெயர்
சாரதா சந்தோஷ்
Saradha Santhosh
பிறப்புபெயர் சாரதா
பிறந்ததிகதி 1976
பிறந்தஇடம் திருநெல்வேலி திருமலை கொழுந்துபுரம்,
தமிழ்நாடு,
 இந்தியா.
தேசியம் இந்தியர், தெலங்கானா
கல்வி எம்.காம்., எம்.பி.ஏ.,
அறியப்படுவது எழுத்தாளர், பேச்சாளர்
பெற்றோர் பெ. கண்ணன் சானகி ராமன் (தந்தை)
ராஜலட்சுமி (தாய்)
துணைவர் சந்தோசு மகாதேவன்
பிள்ளைகள் அபிசேக்

சாரதா சந்தோஷ் (Saradha Santhosh) சமூக வலைதளங்களிலும் இலக்கியம் சார்ந்த அமைப்புகளிலும் முனைப்போடு இயங்கிவரும் தமிழார்வலராவார். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர்,[1] பல தமிழ்க் குழுக்கள் மற்றும் தளங்களில் நிர்வாகி, தொகுப்பாசிரியர், இலக்கிய நிகழ்ச்சி தொகுப்பாளர், கவியரங்கத் தலைமை,[2] உலகளாவிய கவிஞர்களின் ஒருங்கிணைப்பாளர், பத்திரிகையாளர், மின்னிதழ்களின் இணை ஆசிரியர் என பன்முகங்கொண்டு இயங்கி வருகிறார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சமூக அக்கறையும் மனித நேயமும் இவரது கவிதைகளிளும் சொற்பொழிவுகளிலும் வெளிப்படுவதால் இணைய உலகில் சாரதா சந்தோஷ் பரவலாகப் பேசப்படுகிறார். மேலும் இவர் ஒரு சமையல் கலை நிபுணராகவும் அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலை கொழுந்துபுரம் என்ற கிராமத்தில் 1976 ஆம் ஆண்டு கண்ணன் ஜானகி ராமன் ராஜலட்சுமி தம்பதியருக்கு மகளாக சாரதா பிறந்தார். சென்னையின் திருமயிலை பகுதியில் வளர்ந்தார். இயல், இசை மற்றும் நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.

வணிகவியலில் எம்.காம் பட்டம் மற்றும் எம்.பி.ஏ, இந்தியில் பி.ஏ பட்டத்திற்கு இணையான இந்தி தேர்ச்சியும் சாரதாவின் கல்வித் தகுதிகளாகும். மோட்டார் வாகன விற்பனைப் பிரிவில் 13 ஆண்டுகாலம் பணிபுரிந்துள்ளார். விமானப்படை வீரர் திரு. சந்தோஷ் மகாதேவனை மணந்து கொண்டுள்ளார். இத்தம்பதியருக்கு அபிஷேக் என்று ஒரு மகன் இருக்கிறார்.

எழுதிய நூல்கள்

தன்முனைக் கவிதைகள்,[3] புதுக்கவிதைகள், குறுங்கவிதைகள், ஐக்கூ, பாடல்கள். போன்ற கவிதை வகைமைகளையும் ஒரு பக்கக் கதைகளையும் எழுதிவரும் சாரதா இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

  1. ஒரு துளி கடல் (புதுக்கவிதை)
  2. மின் கம்பியில் குருவிகள் (ஐக்கூ)[4]

இலக்கியப் பணிகள்

முனைவர் கவிஞர் மோகன ரங்கன் தமிழியல் ஆய்வு மையத்தின் இயக்குனர்களில் இவரும் ஒருவராவார்.நிறை இலக்கிய வட்டத்தில் செயல் உறுப்பினர், புதிய திசைகள் இணைய தளத்தில் இணை ஆசிரியர், திசைகள் வானொலியில் நிலைய இயக்குனர், உலகத் தமிழ் ஐக்கூ மன்றத்தில் நிர்வாகி, தன்முனைக் கவிதைகள் குழுமத்தில் செயலாளர், என பல்வேறு தமிழ் அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளை ஏற்று இலக்கியப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

சிறப்புகள்

  1. இணையதளத்தில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஓர் ஆங்கில ஐக்கூ கவிதைப் போட்டியில் முதல் 20 இடங்களைப் பிடித்த ஐக்கூ கவிதைகளில் சாரதாவின் கவிதையும் இடம்பெற்றது.[5]
  2. 2019 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் சாராதாவின் துளிப்பா படைக்கும் திறமையைப் பாராட்டி இலக்கியச் சாரல் அமைப்பு இவருக்கு துளிப்பா இளவரசி என்ற பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
  3. மயிலை கத்தூரிபாய் சிறுவர் சங்கம் வாயிலாக ஒவ்வோர் ஆண்டும் சென்னை வானொலியில் சிறார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.[6]

மேற்கோள்கள்

  1. Admin. "தன்முனைக் கவிதைகளின் தந்தை – Tamilnenjam". பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
  2. "ஆலந்தூர் கோ. மோகனரங்கன் பன்னாட்டுக் கவியரங்கம்". ஆலந்தூர் கோ. மோகனரங்கன் பன்னாட்டுக் கவியரங்கம். பார்க்கப்பட்ட நாள் 2021-04-17.
  3. "Saradha K Santosh". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-04-17.
  4. "E0 (Bluetooth)". Springer-Verlag. பார்க்கப்பட்ட நாள் 2021-07-04.
  5. "Editors Corner". Language and Speech. 1987-07. pp. e0–e0. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1177/002383098703000301. பார்க்கப்பட்ட நாள் 2021-07-04. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. "E0 (Bluetooth)". Springer-Verlag. பார்க்கப்பட்ட நாள் 2021-07-04.
"https://tamilar.wiki/index.php?title=சாரதா_சந்தோஷ்&oldid=4095" இருந்து மீள்விக்கப்பட்டது