சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது
Jump to navigation
Jump to search
சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது
விருது வழங்குவதற்கான காரணம் | இலக்கிய பங்களிப்பிற்கான விருது |
---|---|
முதலில் வழங்கப்பட்டது | 2011 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2020 |
மொத்த விருதுகள் | மொத்த விருதாளர்கள் |
60 | 10 |
இணையம் | http://sahitya-akademi.gov.in / |
இதை வழங்குவோர் | சாகித்திய அகாதமி, இந்திய அரசு |
சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது அல்லது யுவ புராஸ்கர் (Yuva Puraskar) என்பது இந்திய அரசு அமைப்பான சாகித்திய அகாதமி, 35 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ‘இளம் எழுத்தாளர்’ (யுவ புரஸ்கார்) எனும் தலைப்பில் வழங்கிச் சிறப்பிக்கும் விருது ஆகும். ஆண்டுதோறும் இருபத்தி நான்கு இந்திய மொழிகளில் படைப்புகளில் சிறந்த இளம் எழுத்தாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திய மொழிகளில் வெளிவரும் கதை, கட்டுரை, கவிதை நூல்களுக்கு, மொழிகளின் வாரியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மொழியிலும் வெளியான நூல்களில் கதை, கட்டுரை, கவிதை என்று ஏதாவது ஒரு நூலுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 2011-இல் நிறுவப்பட்ட இவ்விருது ரூ.50,000 ரொக்கமும் செப்புத் தகடும் பரிசாகக் கொண்டது.[1][2]
விருதை வென்றவர்கள் (தமிழ்)
- 2011 எம். தவசி - சேவல்கட்டு - புதினம்
- 2012 மலர்வதி (இ. மேரி பிளாரா) - துப்புக்காரி
- 2013 கதிர் பாரதி - மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கவிதைகள்
- 2014 ஆர். அபிலாஷ் - கால்கள் - புதினம்
- 2015 வீரபாண்டியன் - பருக்கை - புதினம்
- 2016 லட்சுமி சரவணக்குமார் - கானகன் - புதினம்
- 2017 ஜெ. ஜெயபாரதி (மனுஷி) - ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள் - கவிதைகள்
- 2018 சுனீல் கிருஷ்ணன் - அம்பு படுக்கை (சிறுகதைத் தொகுப்பு)
- 2019 சபரிநாதன் - வால் (கவிதை தொகுப்பு)
- 2020 சக்தி - மரநாய் (கவிதைத் தொகுப்பு)
- 2021 கார்த்திக் பாலசுப்பிரமணியன் - நட்சத்திரவாசிகள் (புதினம்)
- 2022 ப. காளிமுத்து - தனித்திருக்கும் அரளிகளின் மதியம் (சிறுகதைத் தொகுப்பு)
- 2023 ராம் தங்கம் - திருக்கார்த்தியல் (சிறுகதைத் தொகுப்பு)
- 2024 லோகேஷ் ரகுராமன் - விஷ்ணு வந்தார் (சிறுகதைத் தொகுப்பு)
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Some Sahitya Yuva Puraskar awardees 'condemn' intolerance". timesofindia-economictimes. 2015-11-19. பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-24.