சரத் கமல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பதக்க சாதனைகள்
நாடு  இந்தியா
ஆண்கள் மேசைப்பந்தாட்டம்
பொதுநலவாயம் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 மெல்போர்ன் ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (ஒற்றையர்)
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 மெல்போர்ன் ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (அணி)
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 தில்லி ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (இரட்டையர்)
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010 தில்லி ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (அணி)
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 கோல்டு கோஸ்ட்டு ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (அணி)
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 கோல்டு கோஸ்ட்டு ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (இரட்டையர்)
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 கோல்டு கோஸ்ட்டு ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (ஒற்றையர்)

அசந்தா சரத் கமல் (பிறப்பு 12 சூலை 1982) இந்தியா, தமிழ்நாடு மாநில தொழில்முறை மேசைப்பந்தாட்ட வீரர். 2004ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 16வது பொதுநலவாய மேசைப்பந்தாட்டப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர். அதே போட்டியில் இந்தியாவின் ஆண்கள் அணிக்குத் தலைமை தாங்கி ஒன்பது ஆண்டுகள் வெற்றியாளர்களாகத் திகழ்ந்த இங்கிலாந்து அணியை வென்று அணிகளுக்கான விருதினையும் பெற்றுத் தந்தவர். இச்சாதனையைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு 2004ஆம் ஆண்டு அருச்சுனா விருது வழங்கியது.[1]. இவருக்கு 2022 இல் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.[2]

இதனைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடந்த பொதுநலவாயம் விளையாட்டுக்களில் ஆண்கள் ஒற்றையர் மேசைப்பந்தாட்ட இறுதியாட்டத்தில் கூட்டத்தினரின் விருப்பமான ஆத்திரேலியர் வில்லியம் ஹென்செல்லை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்திய அணி சிங்கப்பூர் அணியை வென்று தங்கப்பதக்கம் பெறவும் முதன்மை பங்காற்றினார். அவரது உலக தரவரிசை 63 ஆகும்.

2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் 2006 ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டுக்களிலும் இந்தியாவின் சார்பில் பங்கெடுத்துள்ளார். இந்தியாவின் முதல்நிலையில் நான்கு ஆண்டுகள் இருந்துள்ளார்.

முன்பு சென்னையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.[3] அவ்வப்போது சென்னை வருகிறபோதும் தற்போது இசுப்பானியாவில் உள்ள சான் செபாசுடியன் தி லெ ரேசு (San Sebastian de los Reyes) மன்றத்திற்கு விளையாடுகிறார்.[1] நுங்கம்பாக்கத்திலுள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளி[4] மற்றும்இலயோலாக் கல்லூரி, சென்னையின் முன்னாள் மாணவர்[1] சூலை 2009 அன்று இவர் திருமணம் புரிந்துள்ளார்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Fresh Faces". India Today. பார்க்கப்பட்ட நாள் 2009-08-06.
  2. "சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது: தமிழகத்தின் இளவேனில் வாலறிவன், பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது : ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்". தின பூமி. பார்க்கப்பட்ட நாள் 2022-12-01.
  3. "Sharath Kamal storms into final". The Hindu. Archived from the original on 2006-04-20. பார்க்கப்பட்ட நாள் 2006-03-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "PSBB Alumni". PSBB Schools. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-08-28.
"https://tamilar.wiki/index.php?title=சரத்_கமல்&oldid=28355" இருந்து மீள்விக்கப்பட்டது