சம்பா தாரா
சம்பா தாரா | |
|---|---|
| உறுப்பினர்-மேற்கு வங்காள சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2021 | |
| முன்னையவர் | நீபால் கொளரி |
| தொகுதி | ரெய்னா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1992 (அகவை 33–34) கிழக்கு வர்த்தமான் மாவட்டம், மேற்கு வங்காளம் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
| கல்வி | இளங்கலை (பர்துவான் பல்கலைக்கழகம்) |
சம்பா தாரா (Shampa Dhara)(பிறப்பு 1992) மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள பட்டியல் சாதி சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட ரெய்னா சட்டமன்றத் தொகுதியின் மேற்கு வங்கச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2021 மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றார்.[2][3]
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்
தாரா மேற்கு வங்காளத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரெய்னா பகுதியினைச் சேர்ந்தவர். இவர் கங்காதர் தாராவின் மகள் ஆவார். பர்த்வான் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள புர்பா பர்த்வானில் உள்ள விவேகானந்தா மகாவித்யாலியாவில் 2015-ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பு கிழக்கு பர்த்வான் மாவட்ட ஊராட்சித் தலைவராகப் பணியாற்றினார்.[1]
அரசியல்
2021ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் வேட்பாளராக ரெய்னா சட்டமன்றத் தொகுதியில் தாரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 108,752 வாக்குகளைப் பெற்று தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய ஜனதா கட்சியின் மாணிக் ராயை 18,205 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5] சூன் 2022-இல், இவர் போட்டி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படும் ஒரு சர்ச்சையில் ஈடுபட்டார். மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இவர்களுக்குக் கட்சி சின்னம் வழங்கப்பட்டது.[6]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Shampa Dhara(All India Trinamool Congress(AITC)):Constituency- RAINA (SC)(PURBA BARDHAMAN) – Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 9 December 2024.
- ↑ "West Bengal Election Results 2021: Here's full list of winners – CNBC TV18". CNBCTV18 (in ஆங்கிலம்). 3 May 2021. Retrieved 9 December 2024.
- ↑ "MPs and MLAs | Purba Bardhaman District , Govt. of WB | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 9 December 2024.
- ↑ "Raina Election Result 2021 Live Updates: Shampa Dhara Of TMC Wins". News18 (in ஆங்கிலம்). Retrieved 9 December 2024.
- ↑ "Raina West Bengal Election 2021 Final Results LIVE:TMC Candidate Shampa Dhara wins from Raina, Details Inside". ABP Live (in ஆங்கிலம்). 2 May 2021. Retrieved 9 December 2024.
- ↑ Service, Statesman News (22 June 2023). "TMC official candidates denied symbol, given to independents instead". The Statesman (in ஆங்கிலம்). Retrieved 9 December 2024.