சமுதாயம் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சமுதாயம் ஆசிரியர் எஸ்.எம். ஹனிபா

சமுதாயம்: இலங்கையில் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டிக்கு அண்மையில் உள்ள கல்ஹின்னை எனுமிடத்திலிருந்து வெளிவந்த காலாண்டிதழாகும்.

ஆசிரியர்

எஸ். எம். ஹனிபா. இவர் சாஹிராக் கல்லூரியில் கற்கும் காலத்தில் இச்சஞ்சிகையை வெளியிட்டார்.

முதல் இதழ்

சமுதாயம் முதல் இதழ் 1948ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. ஆறு இதழ்கள் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளதாக அறியமுடிகின்றது. சமுதாயம் நின்ற பின்பு எஸ். எம். ஹனிபா தமிழ்மன்றம் என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கி ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு வந்தார்.தமிழ் மன்றம் 100க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

உள்ளடக்கம்

சமுதாயம் கலை இலக்கிய சஞ்சிகையாக விளங்கியது. இதில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், நேர்காணல்கள் போன்ற பல்வேறு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் குறிப்பாக பல்கலைக்கழக விரிவுரையார்கள், பேராசிரியர்களின் ஆய்வுக் கட்டுரைகளும், இஸ்லாமிய அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
  • 19ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 8, 1982)
"https://tamilar.wiki/index.php?title=சமுதாயம்_(இதழ்)&oldid=14721" இருந்து மீள்விக்கப்பட்டது