சனூர்
சனூர் Sanur Pantai Sanur | |
|---|---|
கடற்கரை | |
சனூர் கடற்கரை; பின்புலத்தில் அகோங் மலை | |
| ஆள்கூறுகள்: 8°41′S 115°16′E / 8.683°S 115.267°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாநகரம் | தென்பசார் (Denpasar) |
| நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +8 |
சனூர் (ஆங்கிலம்: Sanur; இந்தோனேசியம்: Pantai Sanur; பாலினியம்: Pasih Sanur) என்பது இந்தோனேசியா, பாலி, தென்பசார் மாநகரத்திற்கு கிழக்கே உள்ள ஒரு கடற்கரைப் பகுதியாகும். தற்போது இந்தக் கடற்கரை ஒரு சிறிய நகரமாக வளர்ந்துள்ளது. நுகுரா ராய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து சுமார் 30 நிமிடப் பயணத் தொலைவில் உள்ளது.
சனூர் கடற்கரை 5.1 கிமீ (3.2 மைல்) பரப்பளவு கொண்டது. இந்தக் கடற்கரை மாத்தாகரி தெர்பிட் கடற்கரையிலிருந்து மெர்த்தாசாரி கடற்கரை வரை, 2008-இல் மீட்டெடுக்கப்பட்டது.[1]
வரலாறு
வரலாற்றுக்கு முந்தைய காலம்
சனூர் அருகே உள்ள சனூர் கல் பூங்காவில் வெண்கலக்காலத்தைச் சேர்ந்த பெருங்கல் அமைப்புகள் (Megaliths) கிடைத்துள்ளன. அவை பாலியின் பல இடங்களில் காணப்படுகின்றன. அசல் பெருங்கல் அமைப்புகள் கல் கருவிகளால் செய்யப்பட்டவை. அதன்வழி பாலி தீவில், பாலி அகா மக்கள் (Bali Aga) நீண்ட காலமாக வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.[2] பெடாவா கிராமத்தில் (புலேலெங் குறு மாநிலம்) (Buleleng Regency) காணப்பட்ட மெகாலிதிக் கற்களும் சான்றுகளாய் அமைகின்றன.[3]
20-ஆம் நூற்றாண்டு
1906-ஆம் ஆண்டு பாலியில் இடச்சு படையெடுப்பு தொடங்கியபோது, சனூர் கடற்கரையின் வடக்குப் பகுதி தரையிறங்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, பாலி தீவை ஆக்கிரமிக்க சப்பானியப் படைகள் தரையிறங்கிய போது, சனூர் மீண்டும் நுழைவுப் புள்ளியாக அமைந்தது.
-
சனூரில் இடச்சு படைகள் (1906)
-
சனூரில் இடச்சு குதிரைப்படை (1906)
சனூர் கடற்கரை என்பது தலைநகர் தென்பசாருக்கு மிக அருகில் உள்ள கடற்கரைப் பகுதி என்பதால், கடற்கரை சுற்றுலாவிற்கான பழைமை இடங்களாக விளங்கிய கூத்தா (Kuta), நுசா டுவா (Nusa Dua) மற்றும் உலுவத்து (Uluwatu) போன்றவற்றுக்கு முந்தைய இடமாக சனூர் அமைகிறது. 1966 வரை தீவில் மூன்று குறிப்பிடத்தக்க தங்கும் விடுதிகள் மட்டுமே இயங்கின.[4]}}
1963 ஆம் ஆண்டு, இந்தோனேசிய அதிபர் சுகார்னோவின் கீழ், அப்போதைய பாலி பீச் இன்டர் கான்டினென்டல் தங்கும் விடுதியின் (Bali Beach InterContinental Hotel) கட்டுமானம் தொடங்கியது. 1966-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[4] சப்பானிய போர் இழப்பீட்டு நிதியிலிருந்து கட்டுமானத்திற்கு நிதியளிக்கப்பட்டது.[5]
சொகுசு தங்கும் விடுதி
இதுவே பாலியில் கட்டப்பட்ட முதல் ஐந்து நட்சத்திர சொகுசு தங்கும் விடுதி ஆகும்.[4] மேலும் பன்னாட்டுத் தரத்தில் கட்டப்பட்டு பன்னாட்டு அளவில் நிர்வகிக்கப்பட்ட முதல் இடமாகும். இது பத்து மாடிகள் உயரம் கொண்டது; 566 அறைகளைக் கொண்டிருந்தது. இந்தத் தங்கும் விடுதி இன்றுவரை பாலியில் மிக உயரமான தங்கும் விடுதியாக உள்ளது.[6] இந்தத் தங்கும் விடுதி 42 எக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.[7]
சனவரி 20, 1993 அன்று, 3 நாட்கள் நீடித்த தீ விபத்தால் பாலி பீச் இன்டர் கான்டினென்டல் தங்கும் விடுதி மூடப்பட்டது; அது மீண்டும் கட்டப்பட்டு அக்டோபர் 4, 1993 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.[7]
இந்தோனேசிய நிர்வாக உட்பிரிவுகள்
இந்தோனேசியாவின் நிர்வாகப் பிரிவுகள்; நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[8]
- முதலாம் நிலை: மாநிலம் அல்லது புரோவின்ஸ்; (ஆங்கிலம்: Province இந்தோனேசியம்: Provinsi)
- இரண்டாம் நிலை : குறு மாநிலம்; பிராந்தியம்; அல்லது ரீசன்சி; மாநகரம்; (ஆங்கிலம்: Regency; City இந்தோனேசியம்: Kabupaten; Kota)
- மூன்றாம் நிலை : மாவட்டம் (ஆங்கிலம்: District இந்தோனேசியம்: Kecamatan, Distrik, Kapanewon, Kemantren)
- நான்காம் நிலை : கிராமம் அல்லது துணை மாவட்டம் (ஆங்கிலம்: Village/Subdistrict இந்தோனேசியம்: Desa / Kelurahan)[9]
காட்சியகம்
- சனூர் காட்சிப் படங்கள்
-
சனூர் கடற்கரையில் பாரம்பரிய மீன்பிடி படகுகள்
-
சனூர் துறைமுகம்
-
பெலாஞ்ஜோங் இந்து கோயில்
-
சனூர் கடற்கரை
-
அதிகாலையில் சனூர் கடற்கரை
-
சனூர் பவளப்பாறை
-
சனூர் கடற்கரை குடியிருப்புகள்
-
மெர்தாசாரி கடற்கரை
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Winarti, Agnes (April 3, 2013). "Unclear beach rules causing disarray". The Jakarta Post. Archived from the original on April 6, 2013. Retrieved June 24, 2016.
- ↑ Segliņš, Valdis; Kukela, Agnese; Lazdina, Baiba (January 2019). "Indications of megalithic culture on the island of Bali in Indonesia". Proceedings of the 18th International Conference on Earth & Geosciences, Extended Session SGEM Vienna Green 2018. https://www.researchgate.net/publication/330366758. பார்த்த நாள்: 2024-05-09.
- ↑ Yasa, I Wayan Putra; Purnawibawa, Ahmad Ginanjar; Anjliani, Komang Risna (2022). "The Influence of Megalithic Tradition on the Religious System in the Bali Aga Community, Pedawa Village, Buleleng". Proceedings of the 4th International Conference on Law, Social Sciences, and Education, 28 October 2022, Singaraja, Bali. https://www.academia.edu/113902489. பார்த்த நாள்: 2024-05-09.
- ↑ 4.0 4.1 4.2 Vickers, A. (1989). Bali, A Paradise Created. Singapore: Periplus. p. 252. ISBN 978-1-4629-0008-4. கணினி நூலகம் 728479921.
- ↑ "Famous Bali Hotel Undergoes Transformation Ready For 2024 Re-Opening". thebalisun.com. December 29, 2023. Retrieved 2024-05-24.
- ↑ "The grand reveal of Bali Beach Hotel "Reviving Heritage: Rebirth of a Legacy"". ultimoparadiso.com. 2024-04-01. Retrieved 2024-05-24.
- ↑ 7.0 7.1 "Exit Grand Inna Bali, Enter Meru Sanur". balidiscovery.com. Retrieved 2024-05-24.
- ↑ "Undang-Undang Republik Indonesia Nomor 23 Tahun 2014 tentang Pemerintah Daerah". Law இல. 23 of 2014. House of Representatives.
- ↑ "Undang-Undang Republik Indonesia Nomor 32 Tahun 2004 tentang Pemerintah Daerah". Law இல. 32 of 2004. House of Representatives.
சான்றுகள்
- Picard, Kunang Helmi (1995) Artifacts and Early Foreign Influences. From Oey, Eric, ed. (1995). Bali. Singapore: Periplus Editions. pp. 130–133. ISBN 962-593-028-0.