சந்திரிகா தாண்டன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சந்திரிகா டாண்டன் (Chandrika Tandon) இவர் ஒரு இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் மற்றும் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கலைஞரும் ஆவார். [1] இவர், தாண்டன் கேபிடல் அசோசியேட்ஸ் என்ற வணிக ஆலோசனை நிறுவனம் [2] மற்றும் லிங்கன் நிகழ்த்து கலை மையம் போன்றவற்றின் இயக்குநர் குழுவிலும் [3] மற்றும் பெர்க்லீ இசைக் கல்லூரியின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். [4]

தாண்டன் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவின் துணைத் தலைவராகவும், இப்பல்கலைகழக முதல்வரின் உலகளாவிய அமைப்பின் தலைவராகவும், தாண்டன் பொறியியல் பள்ளிக் குழுவின் தலைவராகவும் உள்ளார். இவர் பெயரிடும் உரிமையை 2014இல் $ 100 மில்லியனுக்கு கொண்டு வந்தார். [5] இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் வணிகப்பள்ளி [6] மேல்ய்ம் இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் லாங்கோன் சுகாதார மையத்தின் அமைப்புகளிலும் பணியாற்றுகிறார். [7] தாண்டன் ஆல்பர்ட் கல்லடின் பதக்கம், [8] வால்டர் நிக்கோல்ஸ் பதக்கம், [9] மற்றும் பாலிடெக்னிக் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். [10]

இவர் நான்கு இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளா. "சோல் கால்" என்ற இசைத் தொகுப்பிற்கு கிராமி விருதுக்கான பரிந்துரையைப் பெற்றார். [11] 2018 இல் , இவர் உலக இந்து காங்கிரசின் பேச்சாளராக இருந்தார். [12]

ஆரம்ப கால வாழ்க்கை

சந்திரிக்கா தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது சகோதரி இந்திரா நூயியுடன் சேர்ந்து தியாகராய நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார் . பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரி மற்றும் அகமதாபாத்தின் இந்திய மேலாண்மை கழகம் ஆகியவற்றிலிருந்து வணிகப் பட்டங்களைப் பெற்றார். [13]

வணிக வாழ்க்கை

தாண்டன், ஒரு அமெரிக்க மேலாண்மை ஆலோசனை நிறுவனமான மெக்கின்ஸி & கம்பெனியில் பங்குதாரராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க பெண்ணாவார் ஆவார். [14]

இவர் 1992இல் தாண்டன் கேபிடல் அசோசியேட்ஸ் என்ற வணிக நிறுவனத்தை நிறுவினார். [15] மேலும், சேஸ் மன்ஹாட்டன் கார்ப்பரேஷன், அமெரிக்கா, யூனிபான்கோ (பிரேசில்), சன்கார்ப்-மெட்வே லிமிடெட் (ஆஸ்திரேலியா), கடற்படை நிதிக் குழு, அமெரிக்க வங்கி, ரபோபங்க் மற்றும் ஏபிஎன் அம்ரோ உள்ளிட்ட பல நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். [16]

உதவி

நியூயார்க் பல்கலைக்கழகத்தின் தாண்டன் பொறியியல் பள்ளிக்கு அமெரிக்க டாலரில் 100 மில்லியன் உதவித்தொகை வழங்கினார். இதௌ இந்திய அமெரிக்கரின் மிகப்பெரிய நன்கொடையாகும். [17] அமெரிக்க இந்தியா அறக்கட்டளையின்   – அறங்காவலராகவும் பணியாற்றியுள்ளார். (2005 – 2011) [18]

கல்வி மற்றும் நிர்வாகம்

அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் துணைத் தலைவர் மற்றும் அறங்காவலர் குழுவில் பணியாற்றினார். [19] நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதல்வரின் உலகளாவிய அமைப்பின் தலைவராக பணியாற்றினார். [20] நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் வணிக்கப்பள்ளியின் உறுப்பினராகவும், அதன் மேற்பார்வையாளர் குழுவிலும் செர்ந்து பணியாற்றி வருகிறார். [21]அமெரிக்காவின் நியூ ஹேவன், சி.டி யில் அமைந்துள்ள, யேல் பல்கலைக்கழகத்தின் உறுப்பினராகவும், சர்வதேச நடவடிக்கைகள் குறித்த முதல்வரின் அமைப்பிலும் உள்ளார். [22] அமெரிக்காவின் பாஸ்டன், பெர்க்லீ இசைக் கல்லூரியின் உறுப்பினர் மற்றும் முதல்வரின் ஆலோசனைக் குழுவிலும் இருக்கிறார். [23] உலகெங்கிலும் உள்ள தற்கால மேற்கத்திய இசை பயிற்சிக்கான தாண்டன் குளோபல் பள்ளிகளுக்கு நிறுவனராகவும் தாண்டன் இருக்கிறார். [24] இந்தியாவின் தமிழ்நாட்டிலிலுள்ள சென்னையில் சென்னை கிறித்துவக் கல்லூரியின், உலகத்தரம் வாய்ந்த வணிகத் திட்டத்தின் நிறுவனராகவும் மற்றும் பங்களிப்பாளராகவும் இருக்கிறார். [25]

குறிப்புகள்

  1. "GRAMMY Award Results for Chandrika Tandon". 2019-06-04. https://www.grammy.com/grammys/artists/chandrika-tandon. 
  2. "$100 Million Gift to NYU School of Engineering from Chandrika and Ranjan Tandon". https://www.nyu.edu/about/news-publications/news/2015/october/100-million-gift-to-nyu-school-of-engineering-from-chandrika-and-ranjan-tandon-.html. 
  3. "Board of Directors". http://www.aboutlincolncenter.org/about/board-of-directors. பார்த்த நாள்: 2017-09-14. 
  4. "Presidential Advisory Council". https://www.berklee.edu/presidential-advisory-council. பார்த்த நாள்: 2017-09-14. 
  5. "Board of Trustees - NYU". https://www.nyu.edu/about/leadership-university-administration/board-of-trustees.html. 
  6. "NYU Trustee & Board of Overseers Member Chandrika Tandon is interviewed". http://www.stern.nyu.edu/experience-stern/news-events/con_033440. 
  7. "Trustees & Overseers". http://nyulangone.org/our-story/our-leadership/trustees-overseers. 
  8. "Darren Walker Is This Year's Commencement Speaker. So Who Is He? – Washington Square News". 2016-03-22. https://www.nyunews.com/2016/03/22/darren-walker-is-this-years-commencement-speaker-so-who-is-he/. 
  9. "2017 Annual Gala" இம் மூலத்தில் இருந்து 2017-09-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170914081717/https://www.childrenshopeindia.org/events/save-the-date-25th-anniversary-gala/. 
  10. "Commencement 2016" இம் மூலத்தில் இருந்து 2017-09-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170914124846/http://engineering.nyu.edu/multimedia/photos/2016/05/commencement-2016. 
  11. "World Music Central". http://worldmusiccentral.org/2010/12/18/grammy-nominee-chandrika-krishnamurthy-talks-about-om-namo-narayanaya-soul-call/. 
  12. "World Hindu Congress 2018 - Whova". https://whova.com/web/world_201809/. 
  13. "Madras Miscellany". The Hindu. 14 January 2001. https://www.thehindu.com/thehindu/2001/01/14/stories/1314128p.htm. பார்த்த நாள்: 14 October 2018. 
  14. "Success is the freedom to do what I want". The Hindu. 2013-04-27. http://www.thehindu.com/features/magazine/success-is-the-freedom-to-do-what-i-want/article4660157.ece. பார்த்த நாள்: 2017-09-21. 
  15. "Entity Information". https://appext20.dos.ny.gov/corp_public/CORPSEARCH.ENTITY_INFORMATION?p_token=003F7F80A4F4C8208E45CD4687708327F574F01FA6E2C328D0FB31647D64662F3377A86E377A0F16FCBBBED372FB2F7A&p_nameid=37FC16E477E94DBD&p_corpid=31A54BBE0B2729B4&p_captcha=17778&p_captcha_check=285B4088BF8DF26D&p_entity_name=tandon%20capital%20associates&p_name_type=A&p_search_type=BEGINS&p_srch_results_page=0. 
  16. "Indo American Arts Council Inc." இம் மூலத்தில் இருந்து 2017-08-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170826215745/http://www.iaac.us/Bios/chandrika_tandon.htm. 
  17. "NYU Polytechnic Gets $100 Million Donation". https://www.wsj.com/articles/nyu-polytechnic-gets-100-million-donation-1444017601. 
  18. "Indra Nooyi's sister Chandrika Tandon in race for Grammy". http://economictimes.indiatimes.com/indra-nooyis-sister-chandrika-tandon-in-race-for-grammy/articleshow/7087644.cms. 
  19. "Board of Trustees". https://www.nyu.edu/about/leadership-university-administration/board-of-trustees.html. 
  20. "NYU's President's Global Council". https://www.nyu.edu/about/leadership-university-administration/office-of-the-president/university-developmentandalumnirelations/president-s-global-council.html. 
  21. "Board of Overseers - NYU Stern". http://www.stern.nyu.edu/experience-stern/about/leadership/board-of-overseers. 
  22. "President's Council on International Activities". http://president.yale.edu/advisory-groups/president-s-council-international-activities. 
  23. "President's Advisory Council". https://www.berklee.edu/presidential-advisory-council. 
  24. "Berklee Tandon Global Clinics". https://www.berklee.edu/focused/india-exchange/berklee-tandon-global-clinics-india. 
  25. "Madras Christian College - Business Education" இம் மூலத்தில் இருந்து 2017-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170921193520/https://www.mcc.edu.in/index.php/global-reach/business-education. 
"https://tamilar.wiki/index.php?title=சந்திரிகா_தாண்டன்&oldid=27090" இருந்து மீள்விக்கப்பட்டது