சத்தியமங்கலம், விழுப்புரம் மாவட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

படிமம்:GHSS Sathiyamangalam.jpg

சத்தியமங்கலம் கிராமம் செஞ்சிக் கோட்டையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் இந்து, இஸ்லாம் மற்றும் கிருத்துவம் ஆகிய மதத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் விநாயகர் கோயில், காளியம்மன், முத்தியாலம்மன், மாரியம்மன், எல்லையம்மன், முத்து மாரியம்மன், திரௌபதி அம்மன், கிழவியம்மன், ஆஞ்சநேயர், சிவன், முருகர், பச்சையம்மன், செல்லியம்மன், ஆகிய கோவில்களும் இரண்டு தேவாலயம் மற்றும் ஒரு மசூதி ஆகியவை உள்ளன. இங்கு பெரிய ஏரி மற்றும் ஒரு சிறிய ஏரி, 1 குளம், அங்கன்வாடி 4, தொடக்கப்பள்ளி 1, 2 நடுநிலைப்பள்ளி, 2 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 1 அரசு பொது சுகாதார நிலையம், 1 காவல் நிலையம், 1 பத்திரப்பதிவு அலுவலகம், 1 தேசிய வங்கி என அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு எடுத்துக்காட்டாக இக்கிராமம் விளங்குகிறது.

 சிறப்புகள்

மேலும் இங்கு இளைஞர்கள் மட்டைப்பந்து ( Cricket)-ல் கடந்த 2019-ஆம் ஆண்டில் செம்மேட்டில் நடைபெற்ற போட்டியில் மாபெரும் முதல் வெற்றியை பதிவு செய்தனர். இது சத்தியமங்கலத்தின் வரலாற்று நிகழ்வாக அமைந்தது.அதன் பிறகு அதிகப்படியான கோப்பைக்களுடன் பல வெற்றிகளை இளைஞர்கள் நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி கால்பந்தில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.கைப்பந்து போட்டியிலும் வெளியூர்களுக்கு சென்று வெற்றி பெற்றுள்ளனர்.[1]மேலும் மணிகண்டன் என்பவர் மாவட்ட அளவில் நடைபெற்ற 10 கி.மீ. ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்துள்ளார் மற்றும் மிதிவண்டி பந்தயத்திலும் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். செஞ்சியை ஆண்ட ராஜாதேசிங்கு மன்னர் அடிக்கடி வந்து சென்ற பகுதியாகவும் விளங்கியுள்ளது.

 திருவிழாக்கள்

இங்கு தைப்பூசத் திருநாளில் மக்கள் காவடி எடுத்து அலகு குத்தி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுவர். மேலும் சிவன் கோயிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமியில் சிறப்பு பூசைகளும் கார்த்திகை மற்றும் இதர சிவ வழிபாட்டு காலங்களில் கோலகலமாகவும் திருவிழாக்கள் கொண்டாடப்படும். பொங்கல் காலங்களில் மூன்று நாட்கள் திருவிழாக்கள் அனுசரிக்கப்படும். பல ஊர்களில் இருந்து மக்கள் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு திரும்புவர்.

மேற்கோள்கள்